தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற கூறினோமா.. வி.பி.துரைசாமி சொன்னாரா? எடப்பாடி பழனிசாமி பதில்
சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன். 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க கூட்டணி முறிவு என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணி புதுவையுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெல்வோம். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியுற்றது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் 550 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் இந்த இரண்டரை ஆண்டுகளில் 2 சதவீத வாக்குகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீத வாக்குகளை நிறைவேற்றிவிட்டதாக சொல்கிறார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் எந்த மாற்றமும் இல்லை.
அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என பாஜக மாநில துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி கூறியது அவருடைய சொந்த கருத்து. அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சியெல்லாம் இருக்கும் என கேட்கிறீர்கள். இதற்கு எனது பதில் பொறுத்திருந்து பாருங்கள்.
அமித்ஷாவோ நட்டாவோ மோடியோ அதிமுகவுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை. பாஜகவினர் அதிமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து யாரும் பேசவில்லை. தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் அதிமுகவினர் மனதை புண்படுத்திவிட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற அதிமுக கோரியதாக கூறுவது தவறு.
பாஜகவிடம் அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலிலும் நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தொண்டர்கள் உழைத்தால்தான் கட்சி வெற்றி பெற முடியும். வெறும் தலைவர்களை வைத்துக் கொண்டு கட்சி நடத்த முடியாது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது, அவர்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்காகவே தவிர இதில் அரசியல் பேச்சு கிடையாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
பாஜகவுடனான கூட்டணி முறிவு விவகாரத்தில் அதிமுக கான்கிரீட்டாக இருப்பதாகவே எடப்பாடி பேசுவதிலிருந்து தெரிகிறது. ஆனால் பாஜக எந்த நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறுகிறார்கள் என தெரியவில்லை. அதிமுக- பாஜக கூட்டணி முறிவு நாடகம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே என கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமியோ இந்தியா கூட்டணிதான் நாடகம். நேற்று டெல்லி தேர்தலுக்கு வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துவிட்டனரே பார்த்தீர்களா, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளே முரண்பாடுகளை கொண்டுள்ளது என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்!












Click it and Unblock the Notifications