காலேஜ் போகும் போதே காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்தேன்! பாஜகவுக்கு மெசேஜ் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
சென்னை: காலேஜ் போகும் போதே காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சொந்த ஊரில் அரசியல் செய்தவன் நான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சுனில் மூலம் காங்கிரஸ் கட்சியோடு எடப்பாடி பழனிசாமி நெருங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் உலா வந்த நிலையில், அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும் அதிமுக பொதுக்குழுவில் பேசிய அவர் தாம் கடந்து வந்த அரசியல் பாதை பற்றி பகிர்ந்துகொண்டார்.

அதிமுக பொதுக்குழு
சினிமா காட்சிகளை விஞ்சும் அளவுக்கு பரபரப்பும் திரில்லும் நிறைந்தபடி, அதிமுக பொதுக்குழு ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது. அதில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் உற்சாகம் பொங்க பேசினார். காங்கிரஸ் வலிமையாக இருந்த காலக்கட்டத்தில் அக்கட்சியை எதிர்த்து தனது சொந்தக் கிராமத்தில் அரசியல் செய்ததாக பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

கல்லூரிக் காலம்
தனது சிலுவம்பாளையம் கிராமத்தில் அதிமுக கொடிகம்பத்தை நிறுவி அதில் கொடியேற்றிவிட்டு தாம் கல்லூரிக்கு சென்றுவிட்டதாகவும் அடுத்த நாள் வந்து பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் அதிமுக கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தியதை பார்த்து போராடி மீண்டும் அதே இடத்தில் கொடிமரத்தை நிறுவியதாகவும் பழைய நினைவுகளில் மூழ்கினார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை காலேஜ் போகும் போதே எதிர்த்த நபர் நான் என்பதை பாஜகவுக்கு சூசகமாக இபிஎஸ் உணர்த்தினார்.

சாதாரண விஷயமல்ல
மேலும், ஜெயலலிதாவிடம் நற்பெயர் எடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்றும் தன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக நெடுஞ்சாலைத்துறையுடன் சேர்த்து பொதுப்பணித்துறையையும் தனக்கு வழங்கியவர் ஜெயலலிதா எனவும் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். கல்லூரிக் காலத்திலேயே காங்கிரஸ் கோட்டைய்யை தூள் தூளாக உடைத்தவன் நான் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

பாஜகவுக்கு மெசேஜ்
இதன் மூலம் காங்கிரஸ் பக்கம் தாம் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்பதை பாஜக மேலிடத்துக்கு அவர் சூசகமாக தெரிவித்திருக்கிறார். சுனில் மூலம் காங்கிரஸ் கட்சியோடு எடப்பாடி பழனிசாமி நெருங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் உலா வந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் காங்கிரஸ் பற்றியும் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications