ஒரு சொட்டு தேங்காதாம்.. குளத்தை பாருங்க.. திமுக அரசை விளாசிய எடப்பாடி.. கமல்ஹாசனுக்கும் ஒரு இடி!
சென்னை: ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்றார்கள்; ஆனால் சென்னையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய கனமழை, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். மழை குறித்து வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்திற்கு முன்பு சொல்லியும் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டதாலேயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பால், உணவுப் பொருட்கள் போன்றவை மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றும் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத சூழ்நிலை இருக்கிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு துரித பணிகள் மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்தது. மேலும் எல்லா இடங்களிலும் அதிகாரிகளில் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய தலைமைச் செயலாளர் மழை பெய்த பின்னர் என்எல்சியிலிருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை கேட்டுள்ளதாக சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர்களின் செயல்பாடு என்னவென்று.

மழை வெள்ள பாதிப்புகளுக்கு வடிகால் பணிகளை அதிமுக ஆட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டோம். அதன் பின்னர் இவர்கள் வந்து அதை தொடர்ந்தனர். தற்போது மழை நீர் வடிகால் பணிகள் சென்னையில் முடிந்ததாக சொல்லிவிட்டு தற்போது 51% மட்டுமே பணிகள் முடிந்திருப்பதாக சொல்வது ஏன்? 20 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்று சொன்னார்கள். ஆனால் சென்னை முழுக்க குளம் போல் நீர் தேங்கி இருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே எச்சரித்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளோம். ழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மழை பாதிப்பு குறித்து அரசை குறை சொல்லும் நேரம் இதுவல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications