அதிமுக வழக்கில் ட்விஸ்ட்.. கோர்ட்டில் எடப்பாடி எடுத்த புது ஸ்டான்ட்.. ஒன்னும் புரியலையே.. என்னாச்சு?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று புதிய ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. இத்தனை காலம் வழக்கை வேகமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த எடப்பாடி இன்று கோர்ட்டில் புதிய ஸ்டான்ட் எடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்து வாய்தா கேட்டுக்கொண்டே இருக்கிறது.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை சில நிமிடங்கள் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான வாதம் ஒன்றை வைத்தது.

என்ன கோரிக்கை
அதில், அதிமுகவில் விதிகளை மாற்றி, பொதுக்குழுவை கூட்டி, பதவிகளில் மாற்றம் செய்து உள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த விதி மாற்றங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்த வழக்கிற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

பதில் என்ன
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுத்தாக்கலை உடனே செய்யுங்கள். உங்களுக்கு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கிறோம். அதற்கு எதிர்மனுதாரர்கள் இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும், என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.இதையடுத்து எடப்பாடி தரப்பில் இதற்காக கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையம், பொதுக்குழு முடிவை அங்கீகரிப்பது பற்றி முடிவுகளை எடுக்கலாம். இந்த வழக்கிற்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கூடுதல் மனு தாக்கல் செய்தது.

ஓபிஎஸ் பதில்
இப்படி இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. இந்த பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் முன் உச்ச நீதிமன்றம் எப்படி இடைக்கால தீர்வு வழங்க முடியும். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மனுதாரராக இல்லாத போது எப்படி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எடப்பாடி இடைக்கால தீர்வு கோர முடியும். அதிமுக பொதுக்குழு கூடியதே தவறு. அப்படி இருக்கும் போது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்க சொல்லி இடைக்கால நிவாரணம் எப்படி கோரலாம் என்று ஓ பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், தேர்தல் ஆணையம் தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த இடைக்கால மனு தவறானது. இந்த மனுவை விசாரிக்க கூடாது என்று பதற்றமாக வாதம் வைத்தது.

எதிர் தீர்ப்பு
முன்னதாக இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் அடிக்கடி வாய்தா கேட்பதாகவும். வழக்கு விசாரணையை காலதாமதம் செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் கண்டித்து இருந்தது. அதே சமயம் வழக்கில் விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நேரம் இன்மை காரணமாக வழக்கை நாளை தள்ளி வைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர். இத்தனை காலம் வழக்கை வேகமாக நடத்த சொன்ன எடப்பாடி தரப்பு இன்று கோர்ட்டில் புதிய நிலைப்பாடு எடுத்தது. அதன்படி நாளை விசாரணை வேண்டாம், கிறிஸ்துமசுக்கு பின் வழக்கை நடத்தலாம் என்று கூறினர். இத்தனை நாட்கள் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று சொன்ன எடப்பாடி தரப்பு இன்று திடீரென விடுமுறைக்கு பின் நடத்துங்கள் என்று கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் பொதுக்குழு வழக்கை தள்ளி வைக்க ஓ பன்னீர்செல்வம் தரப்புதான் முயன்று வந்தது. ஆனால் தற்போது எடப்பாடி தரப்பும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விரிவான வாதம் வைக்க வேண்டும் என்பதால் எடப்பாடி தரப்பு இந்த கோரிக்கையை வைத்துள்ளதாம்.

ஏன் இப்படி?
இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. குளிர்கால விடுமுறைக்கு பின்பாக மனுக்கள் விசாரணை செய்யப்படும். இன்று நடந்த 5 நிமிட விசாரணையில், எடப்பாடி தரப்பு வைத்த வாதத்தில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தொடுத்த மனு காலாவதியாகிவிட்டதாக வாதம் வைத்தது. ஆனால் மனு காலாவதியாகவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. இதில் ஓபிஎஸ் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது பொதுக்குழுவிற்கு எதிரான ஓபிஎஸ் மனுவும் ஜனவரி 4ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில்.. அடுத்த அமர்விற்குள் இரண்டு தரப்பும் எழுத்து பூர்வமாக மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications