எடப்பாடிக்கு மெகா சிக்கல்.. ஒரே கம்ப்யூட்டரை வைத்து முறைகேடு! காட்டிக்கொடுத்த சிஏஜி ரிப்போர்ட்! அடடா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது.

கடந்த 2016-2021 ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுக பல்வேறு டெண்டர் முறைகளை செய்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தற்போதைய ஆட்சியில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Edappadi Palanisamy to face another trouble in the tender: Explosive CAG REPORT against AIADMK.

முக்கியமாக பல்வேறு டெண்டர் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது.

மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. அதன்படி வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.

அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டன. இந்த புகார்கள் மீதான விசாரணை நடந்து வருகின்றன.

சிஏஜி அறிக்கை

இந்த நிலையில்தான் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது.

ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன. அதை இவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. அதாவது அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து டெண்டர் விடாமல் மேம்போக்காக டெண்டர் விட்டு உள்ளனர்.

ஒரே கம்பெனிகள் டெண்டர்களில் கலந்து கொண்ட போது வேறு கம்பெனிகள் அதில் கலந்து கொள்ளவில்லை.

Edappadi Palanisamy to face another trouble in the tender: Explosive CAG REPORT against AIADMK.

சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் அர்த்தம் உள்ளே இருந்து கொண்ட சிலர் டெண்டருக்கு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

ஒரே கூடுயம்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் வேறு வேறு நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது.

இவர்கள் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இப்படி விடப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 14 கோடி ரூபாய் என்றும், டெண்டர்களின் மதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதேபோல் 51 கோடி ரூபாய் வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வழக்குகள்

அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டு உள்ளன.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலை 715 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் . திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலை விரிவாக்க 720 கோடி ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டது.

ரூ4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக ஆர். எஸ் பாரதி தரப்பில் புகார் வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்த நிலையில் உச்ச நீதிமன்றம் இதில் இடைக்கால தடை விதித்தது. இந்த உச்ச நீதிமன்ற இடைக்கால தடை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2-ந் தேதி விசாரணைக்கு வரும் தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+