எடப்பாடி கேப்பே விடமாட்டேங்குறாரே.. திமுகவை எதிர்பார்க்காத இடத்தில் அடிக்க போகும் அதிமுக! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அடித்து ஆடிக்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. தற்போது திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த 1 வாரத்தில் எடப்பாடி செய்த 4 சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

edappadi palanisamy aiadmk

முதல் ஆளாக இந்த விவகாரத்தில் லீகல் டீமை அனுப்பி எடப்பாடி வழக்கு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி நேரடியாக கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அங்கே சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உள்ளார். அதோடு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போராட்டமும் மேற்கொண்டார். இதோடு இந்த விவகாரத்தில் ஆளுநர் உடன் சந்திப்பு, உண்ணாவிரதம் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் .

அசத்தல் பிளான்: இப்படி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அடித்து ஆடிக்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. தற்போது திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.

அதன்படி திமுகவின் கூட்டணியை வட தமிழ்நாட்டில் உடைக்க எடப்பாடி முடிவு செய்துள்ளதாரம். வட தமிழ்நாட்டில் திமுக உடன் இருக்கும் ஒரு கட்சியையும்.. திமுக உடன் நெருக்கமாக உள்ள இன்னொரு கட்சியையும் இழுக்க எடப்பாடி ஆலோசனை செய்து வருகிறாராம். இதற்காக ஏற்கனவே எடப்பாடி பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டாராம்.

காங்கிரஸ்: இதோடு காங்கிரஸ் கட்சியையும் கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி முடிந்த அளவு திட்டங்களை வகுத்து வருகிறாராம். அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக காங்கிரஸ் இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்தது.

காங்கிரசை இழுக்க திட்டம்: கடந்த வருடம் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.

அதன்பின் லோக்சபா தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிட்டது. இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை உள்ளே இழுக்கவும் எடப்பாடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

கூட்டணி மோதல்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் , நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது

'நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?' தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை; தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது; கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம். அதன்படி காங்கிரசில் கருப்பு ஆடு இருப்பதாக திமுகவினர் சிலர் நம்புகின்றனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறித்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் காங்கிரசில் சில கருப்பு ஆடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட். கூட்டணியை உரசல் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டு செல்லும் முதலமைச்சரை இழிவுபடுத்தும் விதமாக இப்படி செய்ய கூடாது.

பதிலடி: இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கம் அளித்த செல்வப்பெருந்தகை, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக நேற்று 11.6.2024 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், 'கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கு தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது பங்களிப்பை தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப் போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன்., என்றார்

கூட்டணியில் குழப்பம்: இந்த நிலையில்தான் திமுகவின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒண்று கையில் எடுத்துள்ளாராம். இதற்காக ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டத்தை எடப்பாடி கையில் எடுத்து இருக்கிறாராம்.

அதன்படி காங்கிரஸ் - திமுக கூட்டத்தை உடைக்க இந்த பிளான் எடுக்கப்பட்டு உள்ளதாம். 3 மாதங்களில்.. அதாவது பிப்ரவரிக்கு முன் கூட்டணியை முறிப்பதே இந்த இந்த ஆபரேஷன் திரிசூலம் என்கிறார்கள். திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை.

சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் ஒட்டியது, இணையத்தில் கார்த்தி சிதம்பரம் - உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே கூட இதனால் மோதல் ஏற்பட்டது. இணையத்தில் இவர்களுக்கு இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. அதேபோல் நேற்று செல்வப்பெருந்தகையை முதல்வர் என்றதும் சர்ச்சையானது.

இதெல்லாம் காங்கிரஸ் - திமுக இடையே பிளவை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன் கூட்டணியை முறிக்கலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி காய் நகர்த்த தொடங்கி உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+