அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.. திருச்சியில் இன்று முதல் பிரச்சாரம்
சென்னை: தமிழக மக்களவைத் தேர்தலையொட்டி இன்று முதல் திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுகவின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு.பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, வரும் மார்ச் 24-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பகுதியில் தனது பரப்புரையை ஆரம்பிக்கிறார். மார்ச் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடலிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள வாகையாடிமுனையிலும் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலிலும், இரவு 7 மணிக்குத் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோயில் அருகிலும் பரப்புரை மேற்கொள்கிறார். மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஹைவே இன் அருகிலும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரத்தில் உள்ள ராஜேந்திரபிரசாத் சாலையில் உள்ள அன்னை தெரசா பள்ளி அருகிலும் பரப்புரை செய்கிறார். மார்ச் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரில் உள்ள ரோடியர் மைதானத்திலும், மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிதம்பரம் புறவழிச்சாலையிலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவிலும், இரவு 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்கிறார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக, கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்கள், விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் ஆகியோரை இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்துகிறார்.
வடசென்னை - ராயபுரம் மனோ
தென்சென்னை - ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
ஆரணி - கஜேந்திரன்
விழுப்புரம் - பாக்யராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் - சந்திரஹாசன்
நாகை - சுர்ஜித் சங்கர்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - பாபு
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
தருமபுரி - அசோகன்
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி - லோகேஷ்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
சிவகங்கை - சேவியர் தாஸ்
நெல்லை - ஜான்சி ராணி
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications