எடப்பாடியே திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தார்.. அதிமுக கேம் என்ன.. டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்
திருப்பத்தூர்: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் அந்த அரசியல் பிரச்சனை ஓயவில்லை. இந்நிலையில் தவெக எங்கள் எம்எல்ஏக்களை திருடுவதை தடுக்க, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து திருமாவளவனை முதலமைச்சராக்க அனைவரும் முயற்சித்தோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருப்பத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சிங்க பெண்கள் காவல்துறையினருக்கே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பேராபத்தான ஆட்சி உள்ளது. நிழலில் ஹிரோவாக இருந்தவர், நிஜகத்தில் வில்லனாக உள்ளார். மின்வெட்டுக்கு புது புது காரணங்களை சொல்லுமளவுக்கு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் போராடி கொண்டிருக்கிறார்கள்.

எம்எல்ஏக்கள் திருட்டை தடுக்க
ரேஷன் அரிசி கூட தரமாக இல்லை. விலைவாசி விண்ணை உயர்ந்துள்ளது. இது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும். சட்டம் ஒழுங்கு, போதை பொருள் புழக்கத்தால் தான் திமுக ஆட்சி மாற்றப்பட்டது. தவெகவிலும் அதுவே நடக்கிறது. தமிழகதிற்கு பிடித்த சாபக்கேடாக இந்த ஆட்சி உள்ளது. எவ்வளவு சீச்கிரம் ஆட்சி கொடுத்தார்களோ, அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை கலைத்துவிடுவார்கள். இதை திசை திருப்புவதற்காக ஏராளமான அரசியலில் ஈடுபடுகிறார்கள்.
அம்மாவின் ஆட்சி வரவேண்டும் என்பதற்காக அவரின் தொண்டர்கள் ஓரணியில் நின்றுள்ளோம். கம்யூனிஸ்ட்கள், விசிக ஆதரவளிக்காவிடின் தவெகவால் ஆட்சியமைத்திருக்க முடியாது. 107 பேரை வைத்து கொண்டு விஜய் முதலமைச்சராக முடியாது. திமுக ஆட்சியமைக்க விருப்பமில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார். தவெகவால் ஆட்சியமைக்க முடியாதபட்சத்தில், தவெகவால் அதிமுக எம்எல்ஏக்கள் திருடப்படுவதை தடுக்கவே முயற்சி செய்தோம்.
தவெக களவாணி
அதற்கு தவெகவிடம் தான் ஆதரவு கேட்க முயற்சித்தோம். எங்கள் எம்எல்ஏவை தவெக திருடி சென்ற போதே கூறினேன். பரலோகத்தில் உள்ள பரமபிதா போன்றவர், அவதார புருஷர் உங்களால் ஆட்சியமக்க முடியவில்லை. எங்கள் எம்எல்ஏவை திருடியது தவறு. நாங்கள் ஆட்சியமைக்க ஆதரவு கொடுங்கள் என்று விஜயிடம் கேட்க நினைத்தோம். இதை மே 8 ஆம் தேதி சொன்னேன். தவெக ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக அல்ல.
தவெகவால் ஆட்சியமைக்க முடியாது என்பதால் அப்படி செய்ய நினைத்தோம். அவர்களுக்கு பாடம் புகட்ட எடப்பாடியை முதலமைச்சராக்க முயற்சித்தது உண்மை. அதிமுக முயற்சியை ஆதரித்தால், பாஜகவை ஆதரிப்பதை போல ஆகிவிடும் என்று கம்யூனிஸ்ட்கள் பின்வாங்கினர். திமுக அதிமுக எந்த காலத்திலும் இணையாது. அது பொய் பரப்புரை. தவெக எம்எல்ஏக்கள் களவாணி. திமுகவின் ஆதரவை எப்போதும் கேட்கவில்லை.
திமுகவை விட மோசம்
திமுக, அதிமுக ஒருபோதும் சேர முடியாது. திருமாவளவனை முதலமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயற்சித்தோம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அது தவறான கருத்து. நான் சொல்வது தான் உண்மை. நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இதில் குளிர்காய விஜய் நினைக்கிறார். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சி மோசமாக உள்ளது. கொடிய மனதுடன் வக்கிரத்துடன் இந்த ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகளை நசுக்க பார்க்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
