பழனிசாமியின் மவுசு இறங்கு முகத்தில்! ஏர்போர்டில் நடந்தது என்ன? பிரதமரின் பழைய சிரிப்பு மிஸ்ஸிங்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி பெரியளவில் எந்த ரியாக்ஷனையும் வெளிப்படுத்தவில்லை.
Recommended Video
இரு கரம் கூப்பி வணக்கம் வைத்த பழனிசாமியின் கரங்களை தனது கரத்தால் பற்றிய பிரதமர் மோடி, ஓரிரு நொடிகளில் அவரை கடந்து சென்றுவிட்டார்.
கடந்த மே மாதம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் தோளில் தட்டிக்கொடுத்து சிரித்த முகத்துடன் விமான நிலையத்தில் அவர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

அதிமுக பஞ்சாயத்து
அதிமுகவில் எழுந்துள்ள அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச இரண்டு வாரங்களுக்கும் மேலாக முயற்சித்து வருகிறார்கள். அந்த முயற்சிகள் எல்லாம் இருவருக்கும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. டெல்லியில் தான் பிஸியாக இருக்கிறார் பார்க்க முடியவில்லை, சென்னையிலாவது ஒரு பத்து நிமிடம் பார்த்து பேசிவிடலாம் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக காய் நகர்த்தினர். ஆனால் அதுவும் அவர்கள் எதிர்பார்த்தபடி முழுமையாக நிறைவேறவில்லை.

கரங்களை பற்றி
இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்வின் போது எடப்பாடி பழனிசாமி சிரித்த முகத்துடன் இரு கரம் கூப்பி வணக்கம் வைந்த நிலையில், தனது கரத்தால் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பற்றிப்பிடித்த பிரதமர் மோடி ஓரிரு நொடிகளில் அவரை கடந்து சென்றுவிட்டார்.

நிறைய வேறுபாடு
கடந்த மே மாதம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் தோளில் தட்டிக்கொடுத்து சிரித்த முகத்துடன் விமான நிலையத்தில் அவர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இந்த முறை எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி பெரியளவில் சிரிக்கவில்லை என்பதுடன் அவருக்கு சென்னையிலும் நேரம் ஒதுக்கவில்லை என்பது கூடுதல் தகவல். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த முறை சென்னை வந்த போது எடப்பாடி பழனிசாமியை பிரதமர் ட்ரீட் செய்ததற்கும் நேற்று ட்ரீட் செய்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்ததை காண முடிந்தது.

அதிமுக விவகாரம்
தற்போதைய சூழலில் அதிமுக விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட விரும்பாததே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, டெண்டர் முறைகேடு வழக்கு, பொதுச்செயலாளர் பதவிக்கு எதிரான வழக்கு, என எடப்பாடி பழனிசாமியை சுற்றி வழக்குகள் வரிசைக் கட்டி நிற்கும் சூழலில் அவரை சந்தித்துப் பேசுவதை பிரதமர் மோடி மிகவும் நாசூக்காக தவிர்க்க முயல்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications