திமுகவுக்கு உதயநிதி போல.. அதிமுகவுக்கு இளையவரை கண்டறிய வேண்டும்.. எடப்பாடிக்கு வரும் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் ஜென் ஸி தலைமுறையினர் அதிகமாக வாக்களிக்க உள்ளதால், இப்போதே அதிமுக அதற்கு தயாராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனை காதில் கேட்டு கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் யாரையாவது கட்சிக்குள் இழுக்க முடியுமா என்று பேசுவதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளை ஓரம்கட்டி தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்திருந்தாலும், அடுத்த தேர்தலில் அதிமுக எழுந்து நிற்கவில்லை என்றால், பிரச்சனை இன்னும் அதிகமாகும் என்று பார்க்கப்படுகிறது.

Edappadi Palaniswami

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கட்சியில் இருந்து போகிறவர்கள் போகட்டும் என்ற மனநிலையில் இருந்து வருகிறார். எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோருடன் இன்னும் சமாதான பேச்சுவார்த்தையை கூட எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் சென்றுவிட்டனர்.

இன்னும் சுமார் 10 எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. செங்கோட்டையன் தரப்பில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு வருவார்கள் என்ற பேச்சு அரசியலில் விவாதமாகி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்ட திட்டம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

2029ல் பாஜக உடனான கூட்டணியை காப்பாற்றி கொண்டாலே, எளிதாக 2வது இடத்திற்கு நகர்ந்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். ஆனால் களம் தொடர்பாக அதிமுக சீனியர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசிக்க தொடங்கி இருக்கின்றனர். ஏனென்றால் தவெக ஆட்சி அமைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முக்கிய காரணம்.

லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் இளைஞர்களே அதிகமாக வாக்களிக்க இருக்கின்றனர். இதனால் இளைஞர்கள் வாக்குகளை கவர இளம் தலைவர்கள் கட்டாயம் என்று கூறி இருக்கின்றனர். திமுகவுக்கு உதயநிதி ஸ்டாலின் இருப்பது போல், அதிமுகவுக்கு ஒருவர் தேவை என்று கூறி இருக்கின்றனர். இதனை எடப்பாடி பழனிசாமியும் காதில் வாங்கி கொண்டுள்ளார்.

கவர்ச்சிகரமான நடிகரை கட்சிக்குள் கொண்டு வந்தால், அதிமுக புதிய வடிவம் பெறும் என்று நம்புகிறார். இதனால் கொங்கு பகுதியில் இருந்த வந்த தலைவர்கள் சிலரை அணுகலாமா என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தனது உறவுமுறை வழியாக நடிகர்களை அணுகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+