"அண்ணன்" என சொன்ன டிடிவி.. பதிலுக்கு எடப்பாடி சொன்ன வார்த்தை.. அண்ணாமலையையும் மறக்கலையே
சென்னை: மதுராந்தகத்தில் இன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர், டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலையை மறக்காமல் சகோதரர் என அழைத்தது அரங்கத்தை அதிர வைத்தது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி ராமதாஸின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.

இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛இந்தியதிருநாடே மதுராந்தகத்தை நோக்கி பார்த்து கொண்டு இருக்கிறது. பாரத பிரதமர் என்ன பேச போகிறார் என்று நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. மோடி கால் வைத்ததும், இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம், மக்கள் காட்சியாக உள்ளது. மதுராந்தகம் பூமி குலுங்கும் வகையில் மக்கள் திரண்டுள்ளனர். இதுவே வெற்றிக்கான சான்று'' என்று கூறினார்.
மேலும் மேடையில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை கூறி எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். அப்போது, ‛‛இந்த அற்புதமான நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற அடித்தளம் அமைப்பதற்கு தேர்தல் பிரசார நிகழ்ச்சியிலேயே உரையாற்றக்கூடிய மதிப்புக்கும், மரியாதைக்குரியும், போற்றுதலுக்குரிய பிரதமர் மோடி அவர்களே'' என்று ஒவ்வொருவரின் பெயரையும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இந்த வேளையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதிப்புக்குரிய சகோதரர் டிடிவி தினகரன் அவர்களே என்றும், பாஜகவின் முன்னாள் தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்களே என்றும் டிடிவி தினகரன் கூறினார். எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன், அண்ணாமலை ஆகியோர் கடந்த ஆண்டு கடுமையாக விமர்சனம் செய்தனர். தற்போது அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனங்களை மறந்து இருவரையும் சகோதரர் என்று அழைத்துள்ளார். அண்ணாமலையின் பெயரை கூறியபோது பொதுக்கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர்.
முன்னதாக டிடிவி தினகரன் பேசினார். அப்போது அவர், என்டிஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைவராக இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான, பெருமதிப்பிற்குரிய எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே.. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே நோக்கத்ததோடு அமமுக இந்த கூட்டணியில் வர வேண்டும் என்று விரும்பினார்கள். நாங்கள் முழு மனதோடு தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியை முழு மனதோடு ஏற்று கொண்டு வந்து இருக்கிறோம்'' என்று கூறியிருந்தார். பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனை சகோதரர் என்று அழைத்துள்ளார்.
-
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications