கோவையில் கைதி தப்பியோட்டம்.. விஜய்யின் போக்கிரி பட டயலாக்கை சொல்லி எடப்பாடி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி இந்த ஆட்சி எப்படி மக்களை பாதுகாக்கும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் கூட இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி வருவதாகவும், இது போன்ற கடுங்குற்றவாளிகள், தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை புழல் சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடியது, பிறகு தேனியில் 17 சிறைக்கைதிகள் ஒரே நேரத்தில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மேலும் பெண்கள் வீடு புகுந்து கொலை செய்யப்படுவது, சிறுமிகள் அடுத்தடுத்து மாயமாகும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Edappadi palaniswami cites Pokkiri movie dialogue to criticize TVK Govt They only talk no work done

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு கோட்டை விடுவதாகவும் முதல்வர் விஜய் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் கைதி ஒருவர் போலீசிடம் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்திருந்தாலும் முதல் விஜய் இன்று தான் சிறைக்காவலர்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தலை விடுத்து இருந்தார். விஜய் விடுத்த எச்சரிக்கையையும் கோவையில் கைதி தப்பி சென்ற நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.

போக்கிரி பட டயலாக்

"வெற்றி ஆட்சி சாதனை மலரில்" சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம். தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, "சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்", "கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்" என்றெல்லாம்.

இன்று கூட "சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என @CMOTamilNadu செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது. மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், "வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு" என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.

நினைத்தாலே பதறுகிறது

அது எப்படி கைதிகளால், சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது? இது போன்ற கடுங்குற்றவாளிகள், தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது, சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?

அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?.. என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+