சமூக ஆதரவையும் இழக்கும் எடப்பாடி பழனிசாமி.. பறிபோகும் கொங்கு மண்டல ஆதரவு.. அடுத்தது என்ன?
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் சூழலில், அதிமுக இரு தொகுதிகளிலும் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மீண்டும் சிக்கல் உருவாகி இருக்கிறது. முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடர்பாக மீண்டும் பேச தொடங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையிலும் தவெக முன்னிலையில் இருக்கிறது. மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் தாராபுரத்தில் அதிமுக சில சுற்றுகளில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் 11வது சுற்றுக்கு பின் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளிலும் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. 4 மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக இதே இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 4 மாதங்களில் தலைகீழ் மாற்றாக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பம்பரமாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்ட போதும் கூட, அதிமுக இப்படியொரு சூழலுக்கு இறங்கி இருக்கிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமியின் மொத்த திட்டமும் இரு தொகுதியிலும் எடுபடவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தாராபுரம் தொகுதியில் அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை நோக்கி கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் அதிருப்தியில் இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றவும் காய் நகர்த்தப்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இவையெல்லாவற்றையும் கடந்து அதிமுகவுக்கு அதிகம் நம்பி இருந்த சமூக வாக்குகள் கூட கிடைக்கவில்லை.
வன்னியர்கள் மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர் வாக்குகளை அதிமுக - பாமக கூட்டணி தொடர்ச்சியாக கைப்பற்றி வந்தது. இதன் மூலமாகவே அதிமுக கூட்டணி கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதற்கு தவெக நேரடியாக செக் வைத்துள்ளது. வன்னியர்கள் கணிசமாக இருக்கும் மதுராந்தகம் மற்றும் கவுண்டர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தாராபுரம் ஆகிய இரு தொகுதியிலும் தவெக வென்றுள்ளது. இதனால் அதிமுகவுக்கு சமூக ரீதியிலான ஆதரவும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications
