2026ல் ஒரே வெர்ஷன்தான் - அதிமுக வெர்ஷன்.. ஸ்டாலின் தவழ்ந்து போகாமல் இருந்தால் சரி.. எடப்பாடி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 இல் ஒரே வெர்ஷன்தான்.. அது அதிமுக வெர்ஷன்தான் என்றும், சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் 'ஓ'போடுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், காவல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், திமுக 6 வது முறையாக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாம் ஆண்டில் விரைவாக அடியெடுத்து வைக்கவுள்ளது. இதுவரை செயல்படுத்தியிருக்கும் திட்டங்களால் ஏழாவது முறையாகவும் திமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

edappadi-palaniswami-has-said-that-there-will-be-only-one-version-in-2026-it-will-be-the-aiadmk-ver

இதுவரையில் தமிழகம் பார்க்காத, இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் செய்யாத சாதனைகளை திமுக ஆட்சிக் காலத்தில் செய்துள்ளோம். தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் என்னுடைய இந்தப் பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் 1 தான். 2026 இல் திராவிட மாடல் 2.0 லோடிங் என்றார்.

இந்நிலையில், ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று வெர்ஷன் 2.0 லோடிங் ஆம்.. அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமீனில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதல்-அமைச்சரே சாட்சி என்றும், சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் 'ஓ'போடுவார்கள் என்றும், 2026-ல் ஒரே வெர்ஷன்தான் -அது அதிமுக வெர்ஷன்தான் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது: கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி... சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி... பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி...

போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி... போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி... ஸ்டாலின் மாடல் சமூக (அ)நீதிக்கு வேங்கைவயலே சாட்சி... ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி. இதில் இன்று வெர்ஷன் 2.0 லோடிங் ஆம்.. அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமீனில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதல்வரே சாட்சி!

2026-ல் ஒரே வெர்ஷன்தான் -அது அதிமுக வெர்ஷன்தான். மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin... என்று சொல்லும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாங்கள் சட்டையை கிழித்துக் கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+