தேர்தல் பிரச்சாரத்தில் இபிஎஸ்-க்கு கூடும் பிரம்மாண்ட கூட்டம்.. புகழ்ந்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மற்றும் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. இபிஎஸ்-ன் பேச்சு பாரதிய ஜனதா கட்சியை பாராட்டும் வகையில் உள்ளது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இப்போதிருந்தே சூடுபிடித்து வருகிறது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன.

Edappadi palaniswami Annamalai

மறுபக்கம் இரண்டு கழகங்களுக்கும் கடுமையான போட்டி கொடுத்து, தங்களின் இருப்பை நிரூபிக்க நாம் தமிழர், தவெக முயற்சித்து வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என கூறிவிட்டது. தவெக தங்கள் தலைமையில் வலிமையான கூட்டணி உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்கிடையே, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் 10 நாட்கள் கெடு முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. இபிஎஸ்-ன் பேச்சு பாரதிய ஜனதா கட்சியை பாராட்டும் வகையில் உள்ளது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் பாரதிய ஜனதா கட்சி மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, மாவட்டம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, சமுதாய தலைவர்கள் சந்திப்பை மேற்கொள்வார்.

தினந்தோறும் 3 இடங்களில் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். நாள்தோறும் 2 இடங்களில் பிரச்சாரமும், மூன்றாவதாக செல்லும் இடத்தில் பொதுக் கூட்டத்திலும் நயினார் பேசவுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் பாரதிய ஜனதா தொண்டர்களும் பங்கேற்று வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடிக்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அவருடைய ஒவ்வொரு பேச்சும் பாஜவை பாராட்டும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+