எடப்பாடிக்கு மூளையோ மூளை..டிடிவிக்கு ராஜ்யசபா சீட்? பேக் எண்டில் இப்படி ஒரு மாஸ்டர் ப்ளானா? சூப்பர்!
சென்னை: அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்க முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கூட்டணியில் சேர்ந்தால் முக்குலத்தோர் வாக்குகளும் கிடைக்கும் என்பதோடு, டிடிவி தினகரனை டெல்லி அரசியலுக்கு பார்சல் கட்டிவிடலாம் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்கின்றனர்.
'துரோகி' 'பச்சை துரோகி' 'முதுகில் குத்தியவர்' என தமிழில் இருக்கும் துரோகம் என்ற வார்த்தைக்கு புதுப்புது அர்த்தம் கண்டுபிடித்து எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவருடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிமுகவில் இடமே இல்லை என சொல்லி வந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்து இருக்கிறார். மேலும் அவருக்கு ஐந்து முதல் 8 சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

டிடிவி தினகரன்
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை தனது ஆதரவாளர்களை முழுமையாக களத்தில் இறக்கப் போவதாக சொல்லி இருக்கிறார் டிடிவி தினகரன். இந்த நிலையில் ராஜ்யசபா சீட்டு தான் டிடிவி தினகரனின் டார்கெட் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர். ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலியாகிறது. தற்போதுள்ள சூழலில் திமுகவுக்கு 4 ராஜ்யசபா எம்பி பதவிகளும் அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகளும் கிடைக்கும்.
ராஜ்யசபா சீட்
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின் போது டிடிவி தினகரனை ராஜ்யசபா எம்பி ஆக்க எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கும் டிடிவி தினகரனுக்கும் ராஜ்யசபா எம்பி சீட்டு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டு லாபம் என்கின்றனர். மன்னார்குடி உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும், தேனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் முக்குலத்தோர் ஆதரவு டிடிவி தினகரனுக்கு கணிசமாக இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி
ஏற்கனவே அதிமுகவை 'கவுண்டர் கட்சியாக' எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் அதனை தவிடுபொடியாக்கும் வகையில் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார் எடப்பாடி. அதே நேரத்தில் மாநில அரசியலில் கவனம் செலுத்தினால் தனக்கு எதிராக டிடிவி தினகரன் எப்போது வேண்டுமானாலும் திரும்ப கூடும் என்பதால் அவரை டெல்லிக்கு பார்சல் கட்டும் முயற்சியே இது என்கின்றன.ர் ஏற்கனவே திமுக உள்ளிட்ட கட்சிகளில் டெல்லிக்கு ஒருவர் தமிழ்நாட்டுக்கு ஒருவர் என்ற ஃபார்முலா இருக்கிறது.
மாஸ்டர் ப்ளான்
ஜெயலலிதா இருந்த போதும் டெல்லி அரசியலை டிடிவி தினகரன் தான் கவனித்துக் கொண்டார். தற்போது அதே பாணியை பின்பற்றி டிடிவி தினகரனை டெல்லிக்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில் தான் அரசியல் செய்யலாம் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம். முக்குலத்தோர் வாக்குகளும் கிடைத்துவிடும், டிடிவி தினகரனையும் தமிழக அரசியலை கவனிக்க விடாமல் செய்துவிடலாம் என்பது தான் எடப்பாடி திட்டம். அதனால்தான் பல கட்சிகள் கேட்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தராத எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனுக்கு தர முன்வந்ததையும், அதனால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என அறிவித்ததாக சொல்கின்றனர் அதிமுகவினர்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications