அதிமுக பொன்விழா நிறைவு மாநாடு! நாள் குறித்த எடப்பாடி பழனிசாமி! பிரம்மாண்டம் காட்டத் திட்டம்!
சென்னை: அதிமுக பொன்விழா நிறைவையொட்டி பிரம்மாண்ட முறையில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரமோ அல்லது 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமோ இந்த மாநாடு நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லால் அதிமுக பொதுக்குழு பிரச்சனையும் அதற்குள் நீதிமன்றம் மூலம் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக தொண்டர்கள்
அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்வடைந்து காணப்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பதா, ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நிற்பதா என தவித்து வருகின்றனர். இந்நிலையில் சோர்வுற்றிருக்கும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொன்விழா நிறைவையொட்டி நடத்தப்படும் மாநாடுக்கு தேதி கூட குறிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். நினைவுநாள்
அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி அன்றோ அல்லது ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி அன்றோ மாநாடு சென்னை அருகே நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதாலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாலும் டிசம்பர் அல்லது பிப்ரவரி மாதத்தில் மாநாட்டை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகை
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை இருப்பதால் அப்போது மாநாட்டை நடத்தி கட்சியினருக்கும், நிர்வாகிக்ளுக்கும் அவர் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லையாம். இதனிடையே அதிமுக வரலாற்றில் இல்லாத வகையில் மிகப் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்திக்காட்டி, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கத் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுமட்டுமல்லாமல் தொண்டர்கள் தன் பக்கமே என்பதை அந்த மாநாடு மூலம் நிரூபிக்க ஆயத்தமாகிவிட்டார் அவர்.

மாநாடு செலவு
அதிமுக மாநாட்டுக்கான செலவுகளை முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பகிர்ந்துகொள்வார்கள் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications