மது அருந்தும் பழக்கம் எனக்கு கிடையாதுங்க.. அதைப்பற்றி எதுவுமே தெரியாது! எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

எனக்கு மதுபானத்தை பற்றி தெரியாது. மது அருந்தும் பழக்கம் இல்லை. அது என்ன பிராண்ட் என்று தெரியாது. தெரிந்தால் நான் பேசுவேன். நான் காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விட்டு இப்பொதுதான் வந்தேன்" என்றார். கோவை கல்லூரி மாணவர் கொலை சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

Edappadi Palaniswami says I do not have the habit of consuming alcohol I know nothing about it

ரீல்ஸ் போட்டார்கள்.. ரீல் விட்டார்கள்..

இதற்கு பதிலளித்த எடப்பாடி, மாணவர்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. சட்டமன்றத்தில் இது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்கள். இது குறித்த முழு விளக்கத்தை அமைச்சர்கள் திங்கள் கிழமை அளிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

மாணவர் கொலை விவகாரத்தில் உரிய விசாரணைக்கு பிறகுதான் உண்மை நிலை தெரியும். மற்ற மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளை விட போதை பொருள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. தவெக 100 நாள் ஆட்சியா செய்தார்கள். ரீல்ஸ் போட்டார்கள் ரீல் விட்டார்கள். இதுதான் அவர்களின் சாதனை.

ஒரு வாய்ப்பு கொடுத்துட்டாங்க

அரிசி விலை உயர்ந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று குறுகிய நாட்களில் பல போராட்டங்களை இந்த அரசு சந்தித்து வருகிறது. இதுவரை எந்த அரசாங்கமும் தொடக்கத்தில் இப்படிப்பட்ட போராட்டத்தை சந்தித்தது இல்லை. தமிழ்நாட்டு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, சிறு குறு விவசாயிகளுக்கு 75 அயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35 ஆயிரம் தள்ளுபடி என்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

விவசாயிகள் வருமானம் இல்லமால் இருக்கிறரார்கள். மேகதாது விவகாரத்தில் மெத்தனம் இல்லாம, அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் செய்ய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகள்தான் ஆகிறது. எந்த போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். எதோ கட்சி ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டார்கள்.

எதைப் பற்றியுமே தெரியவில்லை

வாய்ப்பு கிடைத்த பிறகு மற்ற கட்சிகள் சொல்வதை கேக்க வேண்டும். கூடணி கட்சிகள் சொல்வதையாவது கேட்க வேண்டும். அதை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். காவிரி பிரச்சினை பற்றி இவருக்கு ஒன்னுமே தெரியவில்லை. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் காலம் தாழ்த்திதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஜூன் மாதம் தண்ணீர் வரவில்லை. ஜூலையில் வரவில்லை. இப்போது ஆகஸ்டில் தான் கொஞ்சம் வந்திருக்கிறது. அதுவும் உபரி நீர். கர்நாடகா உபரி நீரைத்தான் திறக்கிறது. தவெகவிற்கு எதைப் பற்றியுமே தெரியவில்லை. மக்கள் சொல்வதையாவது கேக்க வேண்டும். எதையுமே செயல்படுத்தாத முதல்வராக.. மவுன முதல்வராகவே விஜய் உள்ளார்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+