"கபட நாடகம் ஆடும் திமுக!" பாஜகவுக்கு சப்போர்ட்டாக வந்த எடப்பாடி! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பரபர
சென்னை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத் தனி நீதிபதி தீர்ப்பைச் செயல்படுத்தத் தவறி, தேவையில்லாத பதற்றத்தை திமுக அரசு ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திருப்பரங்குன்றம் கருதப்படுகிறது. எப்போதும் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனச் சொல்லி சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
விசாரணைக்குப் பிறகு, மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத் தனி நீதிபதி தீர்ப்பைச் செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாகத் தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்கக் கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவையில்லாத பிரச்சனை
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜ செல்லப்பா நீதிமன்ற உத்தரவை வரவேற்ற நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமியும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது
முன்னதாக கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் ஏற்ற வேண்டும் என சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், மலை உச்சிக்குப் பதிலாக உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் அமைந்துள்ள உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இருப்பினும், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
நீதிபதி
இது ஒரு பக்கம் இருக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுவாமிநாதன் மீண்டும் தொடர்ந்தார். அந்த வழக்கில் 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். மலை உச்சியில் தீபத்தை ஏற்றவும் நீதிபதி உத்தரவிட்டார். நாளை காலை உத்தரவு நிறைவேற்றிய நகலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications