எடப்பாடி பழனிசாமி டீமின் அதிரடி ஆட்டம்.. தவெகவுக்கு புதிய தலைவலி.. விஜய் செய்ய வேண்டிய அந்த 2 விஷயம்
சென்னை: மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன், தமிழக அரசியல் களம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு அதிரடியான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அணுகுமுறை, அதிமுக பிரமுகர்களின் தவெக நோக்கிய நகர்வுகள் மற்றும் அமைச்சரவை பங்கீடு குறித்த முரண்பாடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் கட்சியை வழிநடத்த வேண்டிய முக்கிய வழிமுறைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த தனது ஆலோசனைகளையும் பிரபல சேனல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பேசும்போது, "ரஜினி இடத்துல இருந்து பார்க்கணும், எல்லாரும் தான் அவரை கூப்பிடுறாங்க, வரமாட்டேன்னு வீட்ல உட்கார்ந்து இருக்க முடியுமா? ஒரு உச்சக்கட்ட நடிகர், நாலு அரசியல்வாதிகள் பேசுறாங்க கூப்பிடுறாங்கன்னா அதற்கு மதிப்பு தந்து போய்த்தான் ஆகணும். நீங்க தொடர்ந்து வம்பு இழுக்கும் போது அவர் வெளியில் வந்து சொல்றார்" என்று தனது வாதத்தைத் தொடங்கினார்..

எடப்பாடி பழனிசாமி - லீமா ரோஸ்
திமுகவில் முதலமைச்சரே தோத்துருக்காரு, இதுல என்ன பியூட்டி என்றால், அவரது கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி 98,000 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். இங்க எங்கே சிக்கல் என்றால், எஸ்பி வேலுமணி பொதுக்குழு கூட்டணும் என்று சொல்கிறார்.. எதுக்காகவென்றால் கட்சியை சரி செய்யணுமாம்? கடந்த முறை சிவி சண்முகம் தோல்வியை சந்தித்தார்.. உடனே அவர், ராஜ்யசபா எம்பி கேட்டு வாங்கிக்கிட்டாரு, அன்னைக்கு அவர்களை விட்டதால்தான் இன்றைக்கு இப்படி செய்கிறார்கள்..
அதுக்காக எடப்பாடி பழனிசாமி செய்வது சரியா? யாராவது நாலு பேர் கட்சிக்கு வந்தால் சேர்த்து கொள்ளணும்.. அந்த 4 பேருக்கு பதிலா நீங்கள் ஏன் லீமா ரோஸை சேர்த்தீங்க? அதுதான் சிக்கல்.. எல்லாவற்றிலும் ஒரு முரண்.. தான் நினைக்கிறதுதான் கரெக்ட் என்கிற எடப்பாடியின் அந்த மனப்பாங்கு மிகப்பெரிய பிரச்சனை.
நிபந்தனை இல்லாம சிபிஐ, சிபிஎம் தவெகவுக்கு ஆதரவு தந்தார்கள்.. விசிகவும், ஐயுஎம்எல் கட்சிகளும் வந்தன.. அதுபோலவே, அதிமுகவில் இருந்தோ, திமுகவில் இருந்தோ யாராவது வந்து நிபந்தனை இல்லாம எங்களுக்கு சப்போர்ட் பண்ணா நாங்க அதை வரவேற்கிறோம், நாம் எல்லாரும் சேர்ந்து ஆட்சி செய்வோம் என்று சொல்ல வேண்டியதுதானே?
சந்தர்ப்பவாத அரசியல்
அமைச்சரவை பதவிகள் அத்தனையும் 100% தவெக நிர்வாகிகள், தவெக எம்எல்ஏக்களுக்குத்தான் போய் சேரவேண்டும்.. அதுதான் தர்மம்.. காரணம், அந்த கட்சி கஷ்டப்பட்டு மக்களின் ஓட்டுக்களை பெற்றுள்ளது..
இத்தனை காலம் எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு, இத்தனை காலம் வேற கூட்டணியில இருந்துட்டு, இன்னைக்கு ஆட்சி அதிகாரம் அமைச்சரவைன்னு வரும்போது இப்போது தவெ பக்கம் வருவது சந்தர்ப்பவாதம் இல்லையா? இது குதிரை பேரமா இல்லையா? ஒரு பத்திரிகையாளரா இதை யாராவது கேட்கிறார்களா? இவங்க என்ன சொல்லி ஓட்டு கேட்டாங்க, இப்ப நீங்க என்ன வேலை பண்றீங்க?
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி
டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டுவாங்க. உங்களுக்கு பொதுச்செயலாளர் பிடிக்கவில்ல என்றால், 10 போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கோங்க.. எடப்பாடி பழனிசாமி ஒழிக அல்லது வாழ்க என்றுகூட சொல்லி கொள்ளுங்கள்.. அதுக்காக தவெக என்கிற ஒரு கட்சியின் செயல்பாட்டுக்குள் நீங்க ஏன் குறுக்கே போறீங்க?
சிவி சண்முகம் போன்றவர்கள், எஸ்பி வேலுமணி போன்றவர்கள் தவெகவுக்குள் சென்று, அந்த கட்சியையும் கெடுக்க பார்க்கிறீங்களா? அந்த கட்சிக்கென்று ஒரு நிலைப்பாடு இருக்கு, அந்த கட்சிக்குன்னு ஒரு கொள்கை இருக்கு.. அந்த கட்சியில அமைச்சர்கள் ஆகணும்னு சிறியவர்கள், எளியவர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க.. நிறைய கோடீஸ்வரர்கள் இருக்காங்க.. அவங்களை விட்டுட்டு ஏழை எளியவர்களை கூப்பிட்டு அமைச்சராக்கினால் தவெகவுக்கு நல்லது. இதனால் 6 மாசத்துக்கு பிரச்சனையே இல்லை
விஜய் செய்ய வேண்டிய 2 விஷயம்
இப்போது விஜய் செய்ய வேண்டியது 2 விஷயம்தான்.. ஊழல் குற்றச்சாட்டு யார் செய்தாலும் சரி, அவர்கள் என்ன தொழில் செய்தாலும்சரி நடவடிக்கை எடுக்கணும்.. இந்த லாட்டரி பிசினஸ் பண்றவங்களை அரசியல் கட்சியில சேர்க்கிறதுனால ஏகப்பட்ட விமர்சனம் இந்த 10 நாட்களில் வந்திருக்கறது.. எனவே எந்த கட்சியாக இருந்தாலும் இனிமேல், 600 , 500 கோடி தருகிறார்கள, பாண்டுல கொடுக்குறாங்க, 400 கோடி சைடுல கொடுக்குறாங்கன்னா தயவு செய்து வாங்காதீங்க.
அதேபோல, அந்த 2000, 3000 வாக்காளர்களுக்கு காசு கொடுத்தால், அதனாலும் பைசா பிரயோஜனம் இல்லை.. வரும் தேர்தல்ல யாரும் மக்களுக்கு காசே கொடுக்காதீங்க.. ஏன்னா அவங்க உங்களுக்கு ஓட்டு போடல. பணக்காரர்கள் என்று யார் வந்தாலும் அவர்களை கட்சிக்குள் சேர்க்காதீங்க" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications