தோளில் தட்டி நலம் விசாரித்த பிரதமர் மோடி! பூரித்துப்போன எடப்பாடி பழனிசாமி! ஏர்போர்ட் ருசிகரம்!
சென்னை: அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தோளில் தட்டி நலம் விசாரித்தார்.
Recommended Video
இதேபோல் மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசனையும் உரிமையுடன் தோளை தொட்டு வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.
மற்றபடி அங்கு அவரை வரவேற்க வந்திருந்த மூத்த அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட அனைவரிடமும் வணக்கம் வைத்துவிட்டு விறுவிறுவென ஹெலிகாப்டரை நோக்கிச் சென்றார்.

மோடி வருகை
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மேயர் பிரியா ராஜன், ஜிகே.வாசன், மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஓரிருவர் மட்டும் சென்றிருந்தனர்.

நலம் விசாரிப்பு
விமானத்தை விட்டு இறங்கியதும் ஆளுநர் ரவி பொன்னாடை அணிவித்து மோடியை வரவேற்றார். அவரைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் முருகன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோருக்கு வணக்கம் வைத்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கண்டதும் அவரது தோளில் தட்டி நலம் விசாரித்தார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத எடப்பாடி பழனிசாமி அப்படியே பூரித்துப்போனார்.

முகமெல்லாம் சிரிப்பு
ஆளும்கட்சி அமைச்சர்களை காட்டிலும் தன்னிடம் பிரதமர் மோடி நின்று பேசியதாலும் தனது கரங்களை பற்றி தோளில் தட்டிக் கொடுத்ததாலும் எடப்பாடி பழனிசாமியின் முகமெல்லாம் சிரிப்பாக இருந்தது. அவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் ஏதோ சைகை செய்த பிரதமர் மோடி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோருக்கும் பாஜக முக்கிய நிர்வாகி ஓரிருவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு விறுவிறுவென சென்றார்.

ஜி.கே.வாசன்
இதனிடையே முன்னதாக ஜி.கே.வாசனிடமும் பிரதமர் மோடி உரிமையுடன் தோளில் தட்டி ஏதோ பேசினார். பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications