எடப்பாடி பழனிசாமியை நம்ப வைத்து ஏமாற்றிய விஜய்.. அது ஒரு உளவியல் அரசியல் விளையாட்டு: கோடீஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அதிமுக, விஜய்யின் கட்சியைத் தொடக்கத்திலிருந்தே வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், விஜய்யின் மென்மையான போக்கைப் பார்த்து, அவர் தங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று தவறாகக் கணக்கிட்டது. இதுவே அதிமுகவின் தவறு.. கூட்டணி அமையும் என்று நம்பி, அதிமுகவினர் விஜய்க்கு வக்காலத்து வாங்குவது போன்ற சூழல் உருவாகிவிட்டது.. அதுவே அவர்களின் அரசியலுக்குப் பின்னடைவையும் ஏற்படுத்தி விட்டது" என்று அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்க்குரல் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "விஜய் ஒரு தரமான அரசியலை முன்னெடுப்பார் என்று நம்பியவர்களை அவர் ஏமாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமியையும் அதிமுகவையும் அவர் நேரடியாக எதிர்க்கவில்லை.

Edappadi Palaniswami

விஜய் உளவியல் அரசியல்

விஜய் தனது அரசியல் வருகையின்போது, மிகவும் மென்மையானவர் போலவும், அரசியல் செய்யத் தெரியாதவர் போலவும் காட்டிக்கொண்டார். ஆனால், உண்மையில் அவர் மிகவும் சாதுர்யமாகவும், தந்திரமாகவும் தனது அரசியல் காய்களை நகர்த்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, விஜய்யை நம்பித் தனது அரசியல் வியூகங்களை வகுத்தார். விஜய்யுடன் நெருக்கமாக இருந்தால் அரசியல் ரீதியாகப் பலன் கிடைக்கும் என்று நம்பிய அவர், விஜய்யின் தந்திர தந்திரமான போக்கைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக, விஜய்யின் கட்சியைத் தொடக்கத்திலிருந்தே வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், விஜய்யின் மென்மையான போக்கைப் பார்த்து, அவர் தங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று தவறாகக் கணக்கிட்டது. இதுவே அதிமுகவின் தவறு.. கூட்டணி அமையும் என்று நம்பி, அதிமுகவினர் விஜய்க்கு வக்காலத்து வாங்குவது போன்ற சூழல் உருவாகிவிட்டது.. அதுவே அவர்களின் அரசியலுக்குப் பின்னடைவையும் ஏற்படுத்தி விட்டது..

விஜய், எடப்பாடி பழனிசாமியை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார். அவர் ஒரு உளவியல் ரீதியான அரசியல் விளையாட்டை விளையாடி விட்டார்.. எடப்பாடி பழனிசாமி, பாஜகவை நம்பி இருந்ததாலும், சரியான முறையில் திமுகவை எதிர்க்காததாலும் தான் ஏமாந்தார். விஜய் எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கவில்லை.. இதை ஒரு துரோகமாகவே பார்க்கிறேன்.

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறும் சூழலில், உள்ளூர் அரசியலில் உரிய முறையில் கவனம் செலுத்தாதது குறித்தும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். திமுகவை விட அதிமுகவிற்குத் தான் அதிக சிக்கல்கள் உள்ளன. பெரிய பணக்காரர்களுக்குக் கட்சியில் பதவிகள் கொடுக்கப்படுவதால் தேர்தல் வியூகங்களில் தொய்வு ஏற்படுகிறது.

மாறியிருக்கும் தேர்தல் முடிவு

அதேபோல திமுக எதிர்ப்பு என்ற கொள்கையிலும் அதிமுக உறுதியாக இல்லை.. அவர்கள் தவறுதலாகச் செயல்பட்டுள்ளனர். அதிமுக வலுவாக திமுகவை எதிர்த்திருந்தால், தேர்தல் முடிவுகள் மாறியிருக்கக் கூடும். அந்த கூட்டணியில் இருந்தவர்கள் விஜய் வருவார் என்ற நம்பியே ஏமாந்து விட்டார்கள்.

சட்டமன்றத்தில் இப்போதுள்ள அரசியல் செயல்பாடுகள் கண்ணியக் குறைவாக உள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருந்த காலத்தோடு ஒப்பிட்டால் நிலைமை மோசமாக உள்ளது.

குதிரை பேர அரசியல்

அந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சட்டமன்றத்திற்குள் கண்ணியக் குறைவான பேச்சுக்களோ கேவலமான விவாதங்களோ இருந்ததில்லை. சிலர் ஆட்சியில் இருக்கும்போது அனைத்து சலுகைகளையும் அதிகாரங்களையும் முழுமையாக அனுபவித்துவிட்டு, சூழ்நிலை மாறும்போதோ அல்லது கட்சியிலிருந்து விலகியபோதோ அதே கட்சித் தலைமையை விமர்சிக்கத் தொடங்குகின்றார்கள்.. மேலும், தாங்கள் மட்டுமே மிகவும் நேர்மையானவர்கள் போலவும் காட்டிக் கொள்ள முயல்கின்றனர்

குதிரைபேர அரசியலில் ஈடுபட்ட ஒருவருக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் மீண்டும் வணக்கம் வைப்பது அரசியல் கண்ணியத்தைக் குறைக்கும் செயல்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+