‘‘சார் இது எதிர்க்கட்சி தலைவரின் கார்''.. சட்டசபை வளாகத்தில் மீண்டும் உதயநிதி காரில் ஏறப்போன எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சட்டசபையில் இருந்து வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கார் என நினைத்து எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறப்போன நிகழ்வு நடந்தது.

edappadi-palaniswami-who-trying-get-into-udhayanidhi-stalins-car-in-tamil-nadu-assembly-premises

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் தாக்கல் 11.40 மணிக்கு முடிவடைந்தது. பல்வேறு புதிய அறிவிப்புகள், விவசாயிகள், விவசாயம், மீன்வளத்துறை, பால்வளத்துறை சார்ந்து வெவ்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்பிறகு தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. நாளை காலை 9 மணிக்கு மீண்டும் சட்டசபை தொடங்கும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதையடுத்து முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு வெளியேறினர்.

சட்டசபையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி தனது கார் என நினைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரின் முன்பக்க கதவை திறந்து ஏற முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர், ''சார் இது உங்கள் கார் இல்லை. எதிர்க்கட்சி தலைவரின் கார்'' என்று கூறினார். சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அந்த காரில் ஏறி அமராமல் உதயநிதி ஸ்டாலினின் காருக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த தனது காரில் ஏறி பயணித்தார்.

இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சட்டசபை வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் காரில் எடப்பாடி பழனிச்சாமி மறந்துபோய் ஏற முயன்ற சம்பவம் இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2022ம் ஆண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது திமுக ஆளும் கட்சியாகவும், அதிமுக எதிர்க்கட்சியாகவும் இருந்தது.

அந்த சமயத்தில் தனது காரில் எடப்பாடி பழனிச்சாமி ஏற முயன்ற சம்பவத்துக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டசபையிலேயே வேடிக்கையாக பதிலளித்தார். அப்போது உதயநிதி அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ இல்லை. திமுக எம்எல்ஏவாக இருந்தார். இதுபற்றி உதயநிதி ஸ்டாலின், ''எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் சென்ற ஆண்டு இந்த அவையில் பேசியபோது வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். நேற்றும் வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். இன்று நான் பேசுவதால் வெளிநடப்பு செய்துவிடுவீர்கள் என்று நினைத்தான்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்காக எனது நன்றி. அப்படி வெளிநடப்பில் சென்றாலும் வெளியே என்னுடைய காரில் தான் ஏற செல்கிறீர்கள். நீங்கள் மட்டும் இல்லை. 3 நாட்களுக்கு முன்பு நானும் உங்களின் காரில் ஏற சென்றுவிட்டேன். அடுத்த முறை நீங்கள் தாராளமாக என்னுடைய காரை எடுத்து செல்லலாம். தயவுசெய்து கமலாலயம் (பாஜக அலுவலகம்)மட்டும் சென்றுவிடாதீர்கள்'' என்று கூறியது சட்டசபையில் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+