பக்கா ஸ்கெட்ச்.. எடப்பாடி பிளான் இப்படி என்றால்.. பவன் வேறலெவல்.. பாஜகவை கழட்டிவிட்ட பின்னணி
சென்னை: ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார் பவன் கல்யாண், இதேபோல் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் வெளியேறி உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெற விரும்பாமல் இருப்பது பாஜகவிற்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அடுத்தடுத்த பேச்சுக்களால் கோபம் அடைந்த அதிமுக தலைமை, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கடந்த செப்டம்பர் 25ம் தேதி கூட்டியது. அந்த கூட்டத்தில் அதிமுகவினர் பலர் பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என்று போர்க்கொடி உயர்த்தினார்கள்.

இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். அன்று மாலையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அத்துடன் ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக அறிவித்தது.
அதிமுகவின் இந்த அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் எதுவுமே சொல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த ஞாயிறு அன்று அவரும் மௌனத்தை கலைத்தார். பாஜக உடன் இனி கூட்டணி இல்லை, இது என் முடிவு அல்ல. எங்கள் கட்சியில் உள்ள 2 கோடி தொண்டர்களின் முடிவு என்று தெரிவித்தார். பாஜக உடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதையும் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார்.
பாஜக உடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால் தான் 2024 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்பிய எடப்பாடி பாஜகவுடான கூட்டணியை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக திடீரென கூட்டணியை முறித்துக் கொள்ள அண்ணாமலை ஒரு சாக்குதான் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பாஜக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுடனும் இல்லாமல் தனித்தே 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிமுகவை தொடர்ந்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேரப்போவதாக பவன் கல்யாண் அறிவித்தும் விட்டார். இதன் மூலம் ஆந்திராவிலும் கூட்டணியை பாஜக இழந்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவிற்கு எதிரான கைது நடவடிக்கையால் கடுப்பாகி தான் பவன் கல்யாண் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதாக கூறப்பட்டாலும், சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்தால் தான் இந்த முறை தேர்தலில் ஓரளவு வெற்றி பெற முடியும் என்று பவன் நினைத்ததால் பாஜக கூட்டணியை விட்டு அவர் வெளியேறி விட்டதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, பவன் கல்யாண் என இருவருமே திட்டமிட்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே ஆந்திராவின் பக்கத்து மாநிலமான தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் பாஜகவிற்கும் சுத்தமாக ஆகாது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அங்கு பிரதான கட்சிகளுடன் கூட்டணியில் பாஜக இல்லை. இனிமேலும் அங்கு கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்கிற நிலையே உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பாஜக கர்நாடகாவில் மட்டுமே வலுவான கூட்டணி அமைத்திருக்கிறது.மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கிறது.
கேரளாவில் பெரிய அளவில் கூட்டணியில் இல்லை. தென்னிந்தியாவில் பாஜக இந்த முறை கடும் சவாலை சந்திக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நல்ல வாக்கு வங்கி உள்ள அதிமுகவின் இழப்பு பாஜகவிற்கு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், ஆந்திராவில் வளர விரும்பும் பாஜகவிற்கு ஜனசேனாவின் பிரிவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். அதேநேரம் வட இந்தியாவில் வலுவாக உள்ளதால், கருத்துக்கணிப்புகளும் சாதகமாக உள்ளதால், தமிழகத்தல் பாஜக தைரியமாக தனி அணி அமைத்து போட்டியிட தயாராகி வருகிறதாம்.
-
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications