எடப்பாடி சொல்வது போல் "திமுக குடும்ப கட்சி தான்.." அழுத்தமாக சொன்ன மு.க ஸ்டாலின்
சென்னை: எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் திமுக குடும்ப கட்சி என்று. நான் அழுத்தமாக சொல்கிறேன், ஆமாம் திமுக குடும்ப கட்சி தான் என்று எடப்பாடியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணை மருத்துக் கல்லூரி மருத்துவமணையில் 600 படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமணையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்தால் எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது பெண்களை கவர்ந்திருக்கிறது. வாக்கு செலுத்தியவர்கள் மட்டுமல்ல நம்மை எதிர்த்தவர்கள் கூட நம்மை இப்போது பாராட்டுகிறார்கள். இது எதிரிகளை அச்சமடைய செய்துள்ளது.

சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி அவர்கள் பேசியிருக்கிறார். அது பேச்சு அல்ல. வயிற்றெரிச்சல். வயிற்றெரிச்சலை வார்த்தையாக கொட்டியிருக்கிறார். ஆட்சிக்கு வந்து திமுக எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பேசுகிறார். நாங்கள் கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் செய்ததை சொன்னால் 2 மணி நேரம் ஆகும்.
என்னற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கோம். சொன்னதிலேயே பெரிய பொய் எதுவென்றால், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தான் திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறதா. இப்படி பச்சை பொய் சொல்கிறார். இலவச பஸ் பேருந்து நீங்கள் போட்ட திட்டமா, காலை சிற்றுண்டி திட்டம் நீங்கள் போட்ட திட்டமா, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் நீங்கள் போட்ட திட்டமா, நம்மை காக்க 48 திட்டம் நீங்கள் போட்ட திட்டமா?..
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்களே அது பாஜகவின் பாதம் தாங்கியாக இருக்கும் எடப்பாடி ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா? ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் கூட ஆகவில்லை.. ஆனால் ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது இந்த திராவிட மாடல் ஆட்சி. 4 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு தன்னைப்போலவே எல்லோரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் போல.
மக்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து தான் இப்படி பொய் பொய்யாக சொல்கிறார். திமுக குடும்ப சொத்து என்று சொல்கிறார் எடப்பாடி. நான் இப்போது அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் திமுக குடும்ப கட்சி தான் கோடிக்கணக்கான தமிழ் குடும்பங்களை வாழ வைக்கிற குடும்ப கட்சி தான் திமுக. நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி முழுமையாக தோற்கடிக்கப்படுகிறார்.
பாஜகவுக்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்பது தெரியும். இப்படி எல்லாம் பேசிவிட்டு தற்போது எடப்பாடி நாடகம் ஆடுகிறார். தேர்தல் நெருங்கும் போது எடப்பாடி பழனிசாமியின் நாடகம் அம்பலமாகிவிடும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு திமுக எத்தனையோ முன்னேற்றங்களை செய்துள்ளது. திராவிட மாடலை நாடு முழுவதும் செயல்படுத்தினால் இந்தியா தலைசிறந்த நாடாக மாறும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications