அதிரடி.. தமிழ்நாட்டில் 20 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்.. முழு பட்டியல் விபரம் இங்கே
சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் 20 முதன்மை கல்வி அலுவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான முழுவிபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் சிஇஓ எனும் முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மாநிலத்தில் 20 சிஇஓக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடமாற்றத்துக்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

* திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
* விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுராி, சென்னை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கோவை முதன்மை கல்வி அலுவலர் பபதி சென்னை தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குநராக (நிர்வாகம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திருச்சி முதன்மை கல்வி அலுவலர் பால முரளி, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்ற உள்ளார்.
* தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், திருச்சி முதன்மை கல்வி அலுவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
* கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலரான புகழேந்தி, திருவாரூர் முதன்மை கல்வி அலுவராக செயல்பட உள்ளார்.

* சேலம் முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வந்த முருகன், கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவராக பணி இடமாற்றப்ப்டடுள்ளார்.
* புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் மணிவண்ணன், பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலராக செயல்பட உள்ளார்.
* தென்காசி முதன்மை கல்வி அலுவலராக செயல்பட்டு வரும் கபீர், சேலம் முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கள்ளக்குறிச்சி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வரி, திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் இராமன், விருதுநகர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குனராக செயல்பட்டு வந்த ஆறுமுகம் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலரான முத்தையா, தென்காசி முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் (சட்டம்) பாலதண்டாயுதபாணி, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த மஞ்சுளா, புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக பொறுப்பு வகித்த சுமதி, கோவை முதன்மை கல்வி அலுவலராக செயல்பட உள்ளார்.
* சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக பணியாற்றிய குழந்தை ராஜன், ஈரோடு முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் (நிர்வாகம்) திருநாவுக்கரசு, சென்னையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக(சட்டம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications