Biggboss 7: விசித்ரா- ஜோவிகா இடையே மோதல்.. படிப்பு குறித்து அஜித் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
சென்னை: படிப்புதான் முக்கியம், செத்துதான் படிக்க வேண்டும் என்றில்லை என இரு வேறு கருத்துகள் தொடர்பான விவாதம் பிக்பாஸில் ஓடி கொண்டிருக்கும் நிலையில் படிப்புதான் முக்கியம் என அஜித் கூறிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன்7 ஆரம்பித்தவுடனே அமர்க்களமாக போய் கொண்டிருக்கிறது. இதில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். அவர் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு 18 வயதாகிறது. அவருக்கு படிப்பு வரவில்லை என்பதால் நடிப்பில் கவனம் செலுத்த போகிறாராம்.

இதனால்தான் பிக்பாஸுக்கு வந்துள்ளதாக அவரே கூறியிருந்தார். இந்த நிலையில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் படிப்புதான் முக்கியம் என ஜோவிகாவிடம் கூறி, குறைந்தது ஒரு டிகிரியாவது வாங்க வேண்டும் என கூறினர். அப்போது விசித்ராவும் அடிப்படை கல்வி என்பது முக்கியம் என சுட்டிக் காட்டினார்.
அதற்கு ஜோவிகா கோபப்பட்டு அறிவும் கல்வியும் முக்கியம்தான். நான் இல்லை என சொல்லவில்லை. இன்று நமது நாட்டில் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு சென்று எத்தனை பேர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அது போல படிக்க முடியாமலும் சாகிறார்கள். அதை சொல்வதற்காகவே நான் இங்கு வந்தேன்.

எல்லாரும் டாக்டர் ஆகிவிட்டால் கம்ப்பவுண்டர் வேலையை யார் செய்வது, எனக்கு கப் ஜெயிக்க வேண்டும். அதற்குத்தான் இங்கு வந்தேன். அதற்காக என் குடும்பத்தை பற்றி பேசாதே என ஒருமையில் பேசினார் ஜோவிகா. இந்த நிலையில் விசித்ராவே நான் நீட் தேர்வு நீ எழுது என சொல்லவில்லை. அடிப்படை கல்வி எல்லோருக்கும் முக்கியம் என்றுதான் சொன்னேன். ஜோவிகாவுக்கு முக்கியம் என சொல்லவில்லை என்றார்.
ஒரு கட்டத்தில் தமிழில் உனக்கு எழுத தெரியுமா, தமிழில் எழுதி காண்பிடி என்றார். இதனால் யுகி உள்ளிட்டோர் தமிழில் எழுத தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை என இப்படியே இந்த பிரச்சினை நீண்டு கொண்டே சென்றது. இந்த விவகாரத்தில் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும் விசித்ராவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

ஜோவிகா நடிப்பு என சென்றுவிடுவார். அவருக்கு குடும்பம் சினிமா குடும்பம். ஆனால் ஜோவிகா வயதில் கிராமங்களில் எத்தனையோ சிறுமிகள் படிக்க முடியாமலும் படிப்பு ஏறாமலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இன்று கூலி வேலை செய்து வருகிறார்கள். அதனால் படிப்பு வேண்டாம் என எப்படி சொல்லிவிட முடியும் என கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் படிப்பு எத்தனை முக்கியம் என்பது குறித்து நடிகர் அஜித் பேசிய பழைய வீடியோ வெளியாகி வருகிறது. இதில் படிப்பு மிகவும் அவசியம். நான் 10ஆம் வகுப்பு வரைதான் படித்து இருக்கிறேன். அடிபட்டு நிறைய கத்துக்கிட்டேன். படிப்பு அறிவு, பட்ட அறிவு என கூறுவார்கள். நான் பட்டுதான் கற்றுக் கொண்டேன்.
அது யாருக்கும் வேண்டாம். ரொம்ப கடினமான வழி. இப்போ நான் உணருகிறேன் ஏன் படிக்கவில்லை என்று! அப்போது எனக்கு படிப்பு ஏறவில்லை, அது வேரு விஷயம்., ஆனால் இன்று நான் உணருகிறேன் படித்து இருந்திருக்கலாமோ என்று அவர் பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது பிக்பாஸ் சர்ச்சைக்கு பிறகு வைரலாகி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications