தரமான சம்பவம்.. எடப்பாடி பழனிசாமிக்கு போனை போட்ட அன்பில் மகேஷ்.. எதுக்கு தெரியுமா?
எடப்பாடி பழனிசாமிக்கு போன் போட்டு பேசினார் அன்பில் பொய்யாமொழி
சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எடப்பாடி பழனிசாமிக்கு போனை போட்டு பேசிய சம்பவம்தான் தமிழக அரசியலில் பரபரப்பை கூட்டி வருகிறது.
Recommended Video
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பலநல்ல அம்சங்கள் தென்பட்டு வருகின்றன.. அதில் ஒன்றுதான் அரசியல் நாகரீகம்.
டாக்டர் ராமதாஸிடம் போன் போட்டு பேசுவதாகட்டும், விஜயகாந்த்துக்கு போன் போட்டு உடல்நலம் குறித்து கேட்டதாகட்டும், சீமானுக்கு போன் போட்டு ஆறுதல் சொன்னதாகட்டும் அனைத்திலுமே ஸ்டாலினின் நடவடிக்கைகள் உற்று கவனிக்கப்பட்டுதான் வருகிறது.

விஜயகாந்த்
அதுபோலவே, அடுத்த தலைமுறை தலைவர்களும், இதுபோன்ற நாகரீக அரசியலை கையில் எடுத்து வருவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. உதயநிதி மூத்த தலைவர்களை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டதாகவும், மா.சுப்பிரமணியம், ஓபிஎஸ்ஸை இப்போதுவரை துணை முதல்வர் என்று அழைப்பதாகவும், அத்தனையும் நல்ல இணக்கத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.

அன்பில் மகேஷ்
இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், எடப்பாடி பழனிசாமிக்கு போன் போட்டு பேசியுள்ளார்.. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை
இதையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடனும் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி கூட்டமும் நடந்து வருகிறது.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், விசிக சார்பில் பாலாஜி உட்பட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எனினும், பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, அமைச்சர் அன்பில் மகேஷ் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் போனில் பேசி அவரது கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார். கடந்த வருடம் பல சலுகைகளை அறிவித்து மாணவர்களின் "ஹீரோவாக உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி.. இந்நிலையில், பள்ளி கல்வித் துறை குறித்து, அமைச்சரே அவருக்கு போன் போட்டு பேசியதும், கருத்து கேட்டதும் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!











Click it and Unblock the Notifications