இன்னும் என்ன யோசனை? 1 சீட் தரக்கூட ரெடி! வாங்க பேசலாம்.. அன்சாரியை வளைக்கும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தீவிரமாக களமாடி வந்த தமிமுன் அன்சாரி, அது தொடர்பாக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து வந்தார். இதனால் எப்படியும் அதிமுக கூட்டணிக்கு தான் அவர் வருவார் என்று அக்கட்சியின் தலைமை நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் சிலர் முன் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் திமுக பக்கம் பாச பார்வையை திருப்பியுள்ளார் அன்சாரி.

Efforts to bring Thamimun Ansari in to the ADMK alliance have intensified

இதனால் இனியும் தாமதிக்காமல் அன்சாரியை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான வேலைகள் வேகமெடுத்துள்ளன. அதிமுகவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வைத்து, குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் அன்சாரியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை சிறுபான்மையினர் விரோத கட்சியாக திமுக பரப்புரை செய்து வரும் நிலையில் அதற்கு அன்சாரி போன்றோர் மூலம் பதிலடி கொடுக்க விரும்புகிறார்.

அதிமுக கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஒன்றும் புதியவர் அல்ல. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவே தமிமுன் அன்சாரி கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி அதிமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அதன் பிறகும் ஒட்டியும் ஒட்டாமலும் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த தமிமுன் அன்சாரி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அங்கிருந்து வெளியேறி நிபந்தனையற்ற ஆதரவை திமுகவுக்கு வழங்கினார்.

ஆனாலும் அவருக்கு சட்டசபை தேர்தலின் போது திமுக தரப்பில் சீட் கொடுக்கப்படவில்லை. இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியை தமிமுன் அன்சாரியின் மஜகவுக்கு கொடுக்கவும் அதிமுக தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் தமிமுன் அன்சாரி தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ. கட்சி அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+