எழும்பூர் டூ திருச்செந்தூர்! கந்த சஷ்டி விழாவுக்கு சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்த சஷ்டி விழாவை ஒட்டி, எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கந்த சஷ்டி விழாவிற்கான கொடியேற்றம் தொடங்கி இருக்கும் நிலையில், தற்போது இந்த சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண, வெளி மாநிலங்கள், நாடுகளிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம். அவர்களின் வசதிக்கு ஏற்ப தற்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Egmore to Tiruchendur

சூரசம்ஹார விழா நடைபெறும் நாளை மையப்படுத்தி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சிறப்பு ரயில்களை பொறுத்தவரை, நவம்பர் 15ஆம் தேதி இரவு 10.30க்கு திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நவம்பர் 16ம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில், நவம்பர் 14ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் வண்டி எண் 06007. நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு இந்த ரயில் திருச்செந்தூர் சென்றடையும். ரயிலில் 8 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 7 ஏசி மூன்றடிக்கு எக்கனாமிக் பெட்டிகள், 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ரயில், மாலை 4:30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி என அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

அதேபோல நவம்பர் 15ஆம் தேதி இரவு 11 மணிக்கு, திருநெல்வேலியில் இருந்து வண்டி எண் 06010/06009 ரயில் புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் என அடுத்த நாள் காலை 9:55 மணிக்கு சென்னை வந்து சேரும்.

அதேபோல நவம்பர் 16ஆம் தேதி மதியம் 12:45 மணிக்கு, தாம்பரத்திலிருந்து புறப்படும் வண்டி எண் 06009 ரயில், அன்று இரவு 11.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலில் 2 ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 6 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமிக் பெட்டி, 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி இருக்கும். எனவே பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+