விஜய்க்கு ஓட்டு போட்டது இதுக்குத்தானா? 8 மணி நேர கரண்ட் கட்! ஆத்திரத்தில் ஆவடி மக்கள் செய்த செயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்வாரியத்தின் சார்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், சென்னை ஆவடியில் 8 நேர மின்வெட்டை கண்டித்து 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் ஏசி, குளிர்பதன சாதனங்கள் மற்றும் மின்சார உபயோகங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Power Cut

சென்னையின் கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு நீடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆவடி பகுதியில் நீண்ட நேர மின்தடை ஏற்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் மதுரை போன்ற நகரங்களிலும் இதே நிலை நீடிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மின்வெட்டு அதிகரித்துவிட்டதாக சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

"எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியாத நிலை உள்ளது" என பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் திடீரென மின்சாரம் தடைபடுவதால் பெண்கள் கூட வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். வேலைக்கு செல்லும் ஊழியர்களும் தூக்கமின்மையால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். மின்வெட்டு குறித்த புகார்களை தெரிவிக்க மின்வாரிய அலுவலகங்களை தொடர்புகொள்ள முயன்றாலும் சரியான பதில் கிடைப்பதில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை வழக்கமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் ஏசி, ஃபேன் உள்ளிட்டவற்றின் பயன்பாடு காரணமாக மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் தற்போது கோடை காலம் முடிந்துவிட்ட நிலையிலும் தொடர் வெப்பம் காரணமாக மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வளாகத்தில் சுமார் 10,000 குடியிருப்புகள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மின்தடைக்கு உரிய தீர்வு காணப்பட்டால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள் உறுதியாகக் கூறினர். இந்த போராட்டம் காரணமாக பூந்தமல்லி சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில் மின்வெட்டு சரி செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+