பாட்டிக்கு ஓரவஞ்சனையை பார்த்தீங்களா? ஆல் பாஸ் வேணுமாம்.. அமைச்சர்கிட்டயே போன் போட்டு குசும்பு!
சென்னை: 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பாஸாக்கிவிடுங்க என மூதாட்டி ஒருவர் போன் போட்டு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையானது கடந்த நவம்பர் மாதமே வெளியாகிவிட்டது. குழந்தைகள் திட்டமிட்டு நல்லமுறையில் படித்து தேர்வு எழுத முன் கூட்டியே வெளியானது.

அதன்படி ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த 10ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு 9.76 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த நிலையில் இந்த தேர்வு நாளையுடன் முடியும் நிலையில் மூதாட்டி ஒருவர் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அந்த மூதாட்டி பேசுகையில், அமைச்சர் அன்பில் மகேஷ் தம்பி! 10 ஆவது படிக்கும் பிள்ளைகளை பூரா பாஸ் ஆக்கிவிட்டுடு சாமி, வெயில் வந்துடுச்சி, வீட்டு ஆளுங்க வேற படிச்சியா படிக்கலையான்னு நொச்சா நொச்சிகிட்டு கஞ்சி குடிக்க முடியாம கிடக்காங்க! பிள்ளைகள் எந்த பள்ளிக் கூடத்துல படிச்சாலும் நல்லா பாஸ் ஆக்கிவிட்டுடுங்க!
கரெக்கிட்டா! பாஸாக்குங்கள். வெயில் வந்துடுச்சி! பாவம்! உன் பிள்ளையா நெனச்சு பாஸ் பண்ணிவிடுப்பா! நம் பிள்ளைங்க, நம்ம மக்கள்னு நினைக்கிற மாதிரி அப்படியே பாஸாக்கிவிடுங்க! என அந்த மூதாட்டி உரிமையுடன் அன்பில் மகேஷுடம் பேசுவது வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், பாட்டி உங்களுக்கு நாங்க என்ன பாவம் செய்தோம் என கேட்கிறார்கள்.
அது போல் கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் பாட்டி எங்களுக்கு ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என கேட்கிறார்கள். மேலும் பாட்டிக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் பேரனோ பேத்தியோ இருக்கிறார்கள் போல! அதனால்தான் அவர்கள் படும் அவதியை பார்த்துவிட்டு கேட்கிறார். கொரோனா அச்சத்தால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனா பாதிப்பால் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படாமல் அனைவருக்கும் பாஸ் போடப்பட்டது. இப்படியிருக்கும் நிலையில் வெயிலுக்காக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் கேட்கும் கோரிக்கை முதல்முறையாக அமைச்சரை வந்தடைந்துள்ளது. இதற்கு அமைச்சர் என்ன பதில் சொன்னார் என தெரியவில்லை. அது ஏன் 10ஆம் வகுப்பு பசங்க மேல மட்டும் பாட்டிக்கு இம்புட்டு பாசம்?
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications