ஜம்மு காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை.. எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்? 7 கட்டங்கள் முழு லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்தல் நடைபெறுகிறது.. எந்த தேதியில் நடைபெறுகிறது என்ற விவரத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

Election Commission announce schedule of Lok Sabha elections seven phases elections Full details

தமிழ்நாடு, புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு அன்று நடைபெறுகிறது. 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 04 ஆம் தேதி நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்து இருக்கின்றன. ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்தல் நடைபெறுகிறது.. எந்த தேதியில் நடைபெறுகிறது என்ற விவரத்தை பார்க்கலாம்.

முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
அருணாசலபிரதேசம் - 2, அசாம் - 5, பீகார் - 4, சத்தீஸ்கர் - 1, மத்திய பிரதேசம் - 6, மகாராஷ்டிரா - 5, மணிப்பூர் - 2, மேகாலயா - 2, மிசோரம் -1, நாகலாந்து - 1, ராஜஸ்தான் - 12, சிக்கிம் - 1, தமிழ்நாடு - 39, திரிபுரா - 1, உத்தர பிரதேசம் - 8, உத்தரகாண்ட் - 5, மேற்கு வங்கம் - 3, அந்தமான் நிக்கோபர் தீவுகள் - 1, ஜம்மு காஷ்மீர் - 1, லட்சத்தீவு - 1, புதுச்சேரி - 1.

2 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
அசாம் - 5, பீகார் - 5, சத்தீஸ்கர் - 3, கர்நாடகா - 14, கேரளா - 20, மத்திய பிரதேசம் - 7, மகாராஷ்டிரா - 8, மணிப்பூர் - 1, ராஜஸ்தான் - 13, திரிபுரா - 1, உத்தரபிரதேஷ் - 8, மேற்கு வங்கம் - 3, ஜம்மு காஷ்மீர் -1

3ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
மூன்றாம் கட்டமாக வரும் மே மாதம் 7 ஆம் தேதி 94 தொகுதிகளில் நடைபெறுகிறது.
அசாம் - 4, பீகார் - 5, சண்டிகர் - 7, கோவா - 2, குஜராத் - 26, கர்நாடகா - 14, மத்திய பிரதேஷ் - 8, மகாராஷ்டிரா - 11, உத்தர பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4, தாதர் நஹவேலி டையு டாமன் - 2, ஜம்மு காஷ்மீர் - 1,

4ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
நான்காம் கட்டமாக மே 13 ஆம் தேதி 96 தொகுதிகளில் நடைபெறுகிறது.
ஆந்திர பிரதேசம் - 25, பீகார் - 5, ஜார்க்கண்ட் - 4, மத்திய பிரதேசம் - 8, மகாராஷ்டிரா - 11, ஒடிசா - 4, தெலுங்கானா - 17, உத்தர பிரதேசம் - 13, மேற்கு வங்கம் - 8, ஜம்மு காஷ்மீர் - 1,

5ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
ஐந்தாம் கட்டமாக மே 20 ஆம் தேதி 49 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் - 5, ஜார்க்கண்ட் - 3, மகாராஷ்டிரா - 13, ஒடிசா - 5, உத்தர பிரதேசம் - 14, மேற்கு வங்கம் - 7, ஜம்மு காஷ்மீர் - 1, லடாக் -1,

6ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
ஆறாம் கட்டமாக மே 25 ஆம் தேதி 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் - 8, ஹரியானா - 10, ஜார்க்கண்ட் - 4, ஒடிசா - 6, உத்தர பிரதேசம் - 14, மேற்கு வங்கம் - 8, டெல்லி - 7.

7ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
ஏழாம் கட்டமாக ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் - 8, இமாச்சல் பிரதேஷ் - 4, ஜார்க்கண்ட் - 3, ஒடிசா - 6, பஞ்சாப் -13, உத்தர பிரதேசம் - 13, மேற்கு வங்கம் - 9, சண்டிகர் -1.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+