சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் 3 முதல் பைக் பேரணி நடத்த தடை - தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து பைக் பேரணி நடத்த தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் பேரணி நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

Election Commission bans bike rallies 72 hours before polling in Tamil Nadu from April 3rd 2021

பல ஊர்களில் வேட்பாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 3 முதல் பைக் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Election Commission bans bike rallies 72 hours before polling in Tamil Nadu from April 3rd 2021

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் நாளிற்கு முன்பாகவும், தேர்தல் நாளன்றும் சில சமூக விரோத சக்திகள் பைக் பேரணி நடத்தி வாக்காளர்களை கவர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Election Commission bans bike rallies 72 hours before polling in Tamil Nadu from April 3rd 2021

இதனைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து பைக் பேரணி நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

English summary
The Election Commission has banned bike rallies 72 hours before the date of polling and on the polling day in all election-going constituencies amid reports that anti-social elements use motor bikes to intimidate voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X