Election Commission: தேர்தல் ஆணைய சர்ச்சை.. தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் மீது மற்ற 2 ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. SIR பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாகச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், சிவசேனா உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக மற்ற தேர்தல் ஆணையர்கள் குற்றம்சாட்டியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்யவேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Election Commission Controversy What Are Tamil Nadu s Major Parties Saying

தேர்தல் ஆணையம் தொடர்பான இந்தச் சர்ச்சை குறித்து தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பார்க்கலாம்.

திமுக

"அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்தி, எஸ்ஐஆர்-க்கு பின்பு நடந்த அனைத்து சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

3 தேர்தல் ஆணையர்களில் சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து, 10 மாதங்களில் 14 முறை அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தும் அவர்கள் புறக்கணிப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.

"நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்து கூட எங்களுக்குத் தெரியவில்லை. இஆர்ஓநெட் வலைத்தளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது" என 2 தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தில் எந்த அளவுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இனியும் ஞானேஷ் குமார் அந்தப் பதவியில் நீடிக்க கூடாது. ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். எஸ்ஐஆர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானர்வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் திமுக சார்பில் வலியுறுத்துகிறோம்" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக

கருத்து இல்லை

தவெக

கருத்து இல்லை

பாமக

கருத்து இல்லை

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

"வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவையே மாற்றியமைத்திருந்தால், அந்தத் தேர்தல் முடிவை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே, SIR நடவடிக்கைகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா? என்பதை சுயாதீனமாக விசாரிக்க வேண்டும்.

அந்த விசாரணையில் தேர்தல் முடிவை பாதிக்கும் அளவிலான தவறுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்தல்களைச் சட்டப்படி இரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும். அத்தகைய மறுதேர்தல் நடைபெற்றால், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயல்படக்கூடாது. அது மக்களின் வாக்குரிமையின் காவலனாக மட்டுமே இருக்க வேண்டும். தனது சுயாதீனத்தன்மை குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு வெளிப்படையான நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் மூலம் பதிலளிக்க வேண்டியது அதன் பொறுப்பு." என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்

நாடாளிமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் செய்துகொண்டிருப்பது முற்றிலும் தவறானது. இது தேசத் துரோகம். நாட்டிற்கு எதிரானது. காலம் வரும்போது நாங்கள் உங்களைப் பிடிப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் தப்பவே முடியாது" என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+