பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா! Time to Lead.. தளபதி To தலைவர்! தமிழக வெற்றிக் கழகத்துக்கு குட் நியூஸ்
சென்னை: விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்ய அனுப்பிய விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில் இம்மாத இறுதிக்குள் 'தமிழக வெற்றிக் கழகம்' மாநில கட்சியாக பதிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி தற்போது அரசியல் கட்சியாகவும் மாற்றி 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க போகிறேன் என சூளுரைத்துள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அதற்கு பிறகு ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதும் விலகிவிடுவேன்.. அதற்குப் பிறகு அரசியல் கட்சி பணிகளை மட்டுமே கவனிப்பேன் என தெரிவித்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கலக்கம் அடைந்து இருந்தாலும் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்திருக்கின்றனர். இப்போது கோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய்.
மேலும் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் முடிவடைந்த பின்னர் தான் அவரது முழு அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு போலவே மாணவர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசு வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
அதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வரும் 18ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விஜய்யின் அரசியல் வருகை, நிர்வாகிகள் நியமனம், மாணவர்கள் சந்திப்பு, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல்வாதியாக விஜய் முதல் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அந்நாளை மிக்க ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு, விஜய்க்கும் ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. கடந்த பிப்.2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னதாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய் மார்ச் 8ஆம் தேதி கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் ஆப் மூலமும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதை அடுத்து லட்சக்கணக்கானோர் அவர் கட்சியில் இணைந்ததாக நிர்வாகிகள் கூறினர். தற்போதைய சூழ்நிலையில் சுமார் 75 லட்சம் பேர் அவர் கட்சியில் இணைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தான் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. பிப்ரவரி மாதமே விஜய்யின் கட்சி பதிவிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் காரணமாக அந்த விண்ணப்பம் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாக தேர்தல் ஆணையம் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட 15 நாட்களுக்குள் யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.. அப்படி எதிர்ப்புகள் ஏதும் வரவில்லை என்றால் அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதனை மாநில கட்சியாக பதிவு செய்யும்.
இதை அடுத்து தற்போது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் தமிழக வெற்றிக் கழகம் மாநில அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அடுத்து மாநாடு, கொடி அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications