இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை நடத்தும் தேர்தல் ஆணையம்.. ஆஜராகும் தலைகள்
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது. அதிமுகவில் தலைமைப் பதவியை யார் வகிப்பது என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

அதிமுகவில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பயன்படுத்த தடை கோரியும், தங்களுக்கு ஒதுக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திர நாத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 15 மனுக்கள் அளித்திருந்தனர். இந்த வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமாகவும், நேரில் ஆஜராகியும் தங்கள் தரப்பு வாதத்தை கடந்த ஜனவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் இறுதி விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் இறுதி உத்தரவு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ஆம் தேதி, அதாவது இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் எனத் தெரிகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications