சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தவறு நடந்த 46 தொகுதிகளில் 43 வாக்குச் சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தவறு நடந்ததாக கூறப்படும் 46 தொகுதிகளில் 43 வாக்குச் சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

கடலூர், பூந்தமல்லியில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று இந்த 10 இடங்களிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Election Commission orders to count VVPAT in 43 polling booths

இதற்கிடையே 46 இடங்களில் வாக்குப்பதிவின்போது 3 விதமான தவறுகள் நடந்ததாக தெரிய வந்தது. மாதிரி வாக்குப் பதிவு நடத்தும் போது அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டு விட்டனர்.

சில தொகுதிகளில் விவிபேட்டில் உள்ள துண்டு சீட்டுகளை அப்புறப்படுத்தவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளையும் விவி பேட்டில் உள்ள துண்டுச் சீட்டையும் அகற்றாமல் தவறு செய்திருந்தனர்.

அப்பத்தா, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மச்சான்.. மாயமான உறவுகள்.. பாழாய்ப்போன நாகரீகத்தால் அப்பத்தா, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மச்சான்.. மாயமான உறவுகள்.. பாழாய்ப்போன நாகரீகத்தால்

இதை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்தார் சத்யபிரத சாஹூ. ஆனால் தேர்தல் ஆணையமோ 13 வாக்குச் சாவடிகளுக்கு மட்டுமே மறுதேர்தல் நடத்த அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள 43 இடங்களில் மறுதேர்தல் நடத்தப்படமாட்டாது என சத்யபிரத சாஹூ தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் 43 இடங்களிலும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

English summary
Election Commission orders to count VVPAT in 43 polling booths which are said to be happened wrong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X