சென்னையில் 39.40 லட்சம்.. தமிழகத்தில் அதிக வாக்காளர் உள்ள தொகுதி எது? வரைவு பட்டியலில் சுவாரசியம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் 39.40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தகவல் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்
இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 40 ஆயிரத்து 407 என்ற அளவில் உள்ளது.

பெண்கள் அதிகம்
சென்னையில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 39 ஆயிரத்து 694. சென்னையில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 99 ஆயிரத்து 995 என்ற அளவில் உள்ளது.

தமிழக நிலவரம்
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 கோடியே 9 லட்சத்து, 25,603 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 3 கோடியே ஒரு லட்சத்து 12,370 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 6,385 மூன்றாம் பாலினத்தவர் வாக்குகள் உள்ளன.

பூத்தில் எவ்வளவு
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், குறைந்த பட்சம் 800 முதல் அதிகபட்சம் 1000 வாக்காளர்கள் ஒரு பூத்தில் இருப்பார்கள் என்றார்.

அதிகபட்ச வாக்காளர்கள்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையடுத்த, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications