“லாஸ்ட் சான்ஸ்”.. வாக்காளர் அடையாள அட்டை முகாம் இன்று! தேவையான ஆவணங்கள் என்ன? ஆதார் அட்டை கட்டாயமா?
சென்னை: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமை இன்று தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-ஐ அறிவித்தது. அது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை அக்டோபர் 25 ஆம் தேதி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024 க்கான கால அட்டவணையை அறிவித்தது. அதன்படி அக்டோபர் 27 ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலமாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்றும் நாளையும் 2 ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
2024 ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாமுக்கு செல்பவர்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகிய அடையாள சான்றிதழ்கள், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது டிஎல் அல்லது பயன்பாட்டு பில் ஆகிய முகவரிச் சான்றிதழ்கள் அவசியம். ஆதார் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே இந்த விண்ணப்பத்துக்கான சான்றுக்காக ஆதார் எண் அல்லது அட்டை கேட்கப்பட்டாலும் நீங்கள் அது இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications