Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: சட்டசபை தேர்தல் காரணமாக பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 651 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி மதிப்பிலான பணம், மதுபானங்கள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதன் காரணமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல், அதாவது 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் செய்யப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வாகன சோதனைகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.651 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ரூ.170 கோடி மதிப்பிலான பணம், மதுபானங்கள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு வங்கத்தில் 11 கோடி ரூபாய், தமிழகத்தில் 30 கோடி ரூபாய், அசாமில் 4 கோடி ரூபாய், கேரளாவில் 8 கோடி ரூபாய், புதுச்சேரியில் 0.2 கோடி ரூபாய் என ரொக்கமாக 53.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று மேற்கு வங்கத்தில் 21,29,103 லிட்டர் மதுபானமும், தமிழகத்தில் 74,029 லிட்டர், அசாமில் 6,84,627, கேரளாவில் 64,862, புதுச்சேரியில் 11,068 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 79.3 கோடி ரூபாய்.
இது தவிர 230 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 58 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 231 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் என மொத்தமாக 651.51 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications