Election Exclusive: ரெடி ஆகிட்டாரு எடப்பாடி.. வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்! யார்? யார்? எங்கே! பரபரப்பான களம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் திமுக இன்னும் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை. இந்த நிலையில் முதல் ஆளாக முந்திக்கொண்டு அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளுக்கும் அதிமுகவின் உத்தேச பட்டியல் தயாராக இருக்கும் நிலையில் முதற்கட்டமாக 50 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியிட இருக்கிறார்.

அதில் பெரும்பாலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளாக இருக்கும் எனவும், தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் அதிமுகவினரின் பெயர்களும் இடம் பெறலாம் என சொல்லப்படுகிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 AIADMK

அதிமுக வேட்பாளர் பட்டியல்

ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குழுவை அமைக்காத சூழலில், தேர்தல் களத்தில் முன்னிலை பெறும் நோக்கில் அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் அதிமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதற்கட்டமாக சுமார் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெ. ஜெயலலிதா

இந்த அறிவிப்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இந்த பட்டியலில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகள் இடம்பெறும் என்றும், தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள சிலரின் பெயர்களும் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத தொகுதிகளில் அதிமுக கட்டாயமாக போட்டியிடும் பகுதிகளுக்கான வேட்பாளர்களே முதலில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி திட்டம்

கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையேற்று முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆளும் திமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணி இந்த முறை ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

அதிமுக முதல் பட்டியல்

தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில கட்சிகளும் இணையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பக்கம், தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ள நாம் தமிழர் கட்சி மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறும் திருச்சி மாநாட்டில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக வியூகம்

இதே நேரத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதால் கூட்டணி அரசியல் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேருக்கு நேர் சந்தித்து உரையாடிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, எதிர்கால கூட்டணி அமைப்பில் மாற்றத்தை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2026 சட்டசபை தேர்தல்

மொத்தத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிடும் அதிமுக முடிவு தமிழக அரசியல் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி நிலைக்கு வராத சூழலில், வேட்பாளர் அறிவிப்புகள் அரசியல் களத்டை மாற்றக்கூடியதாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருவதால், அடுத்த சில வாரங்கள் தமிழக அரசியல் களத்திற்கு முக்கியமான காலமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+