Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்!
சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 169 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வெளியிட்டிருக்கும் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள சில முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளன. குறிப்பான அதிமுக நிர்வாகிகளே அதிருப்தியில் உள்ளன.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது 2026 சட்டமன்ற தேர்தல் களம். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி.

மிக வலுவாக இருக்கும் திமுக கூட்டணியை எதிர்கொள்ள நிச்சயம் பெரும் கூட்டணி பலமும் வாக்கு வங்கியும் அவசியம் என்பதோடு, தேர்தல் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதும் அவசியம் என்பதால் அதனை திட்டமிட்டு செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாம் கட்டமாக 146 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அடுத்தடுத்து வெளியிட்டு திமுக அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்னும் திமுக தரப்பில் தொகுதி பங்கீடே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணி
தற்போது, அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இருக்கிறது. பேச்சுவார்த்தைகளில் பிரச்சனை, பாஜக அதிகம் தொகுதிகள் கேட்கிறது என பல தகவல்கள் உலா வந்த நிலையில் அதையெல்லாம் முறியடித்து ஒரே நாளில் கூட்டணி பங்கிட்டை முடித்திருக்கிறார். மேலும், எந்தெந்த தொகுதியில் யார்? யார்? போட்டி என்ற லிஸ்டும் வந்து விட்டது.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது சில விமர்சனங்களும் முன் வைக்கப்படுகிறது. இந்த முறை நடைபெற்ற தொகுதி ஒதுக்கீட்டில், திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் பல தொகுதிகளில் மக்களிடம் பெயர் பெற்ற இரட்டை இலை சின்னத்தை நேரடியாக களம் இறக்காமல், கூட்டணி கட்சிகளின் தாமரை, குக்கர், மாம்பழம் போன்ற சின்னங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் வழக்கமாக, திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகளில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும்.
இரட்டை இலை
குறிப்பாக திமுகவில் வலுவான அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக தரப்பில் வலுவான வேட்பாளர்களை நிறுத்துவார் ஜெயலலிதா. இது அவர் பின்பற்றிய முக்கிய அரசியல் யுக்தியாகக் கருதப்படுகிறது. அது பலனும் கொடுத்துள்ளது. வலுவாக உள்ள உதயசூரியன் சின்னத்திற்கு எதிராக இரட்டை இலையை நேரடியாக நிறுத்துவது தான் வெற்றிக்கான முக்கிய தந்திரம் என கடந்த தேர்தல் அனுபவங்கள் காட்டியுள்ளன. ஆனால், இந்த முறை அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
திமுக அமைச்சர்கள்
திமுக முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் சில முக்கிய தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் களம் காணும் வகையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக, சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிராக குக்கர் சின்னத்தில் அமமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். அதேபோல், திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக தாமரை சின்னத்தில் பாஜக வேட்பாளர் களம் காண உள்ளார். மேலும், ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் ஆர்.காந்திக்கு எதிராக பாஜக, சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரனுக்கு எதிராக பாமக போட்டியிடுகிறது.
எடப்பாடி மீது விமர்சனம்
மேலும், திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமமுக, ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பாஜக, ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சக்கரபாணிக்கு எதிராக தமாகா என பல இடங்களில் கூட்டணி கட்சிகளே களம் இறக்கப்பட்டுள்ளன. இதேபோல், திருச்செந்தூர், திருப்பத்தூர், ராதாபுரம் உள்ளிட்ட பல முக்கிய தொகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. எடப்பாடி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
அரசியல் வியூகம்
பொதுவாக, வலுவான அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் கண்டிருந்தால் கடுமையான போட்டி நிலவியிருக்கும். இதனால், அந்த அமைச்சர்கள் தங்கள் சொந்த தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி, பிற தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்திருக்கும் என்பது அரசியல் நிபுணர்கள் கூறும் கருத்தாகும்.
கூட்டணி கட்சிகள்
ஆனால், கூட்டணி கட்சிகளின் சின்னங்களை களம் இறக்கியிருப்பதால், அந்த அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் பெரிதாக பிரச்சனை இல்லாமல், மண்டல மற்றும் மாவட்ட அளவிலான தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதனால், அதிமுக எடுத்துள்ள இந்த முடிவு தேர்தல் வியூக ரீதியாக சரியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
வில்லிவாக்கத்தில் இழுபறி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜாக்பாட்? முக்கிய பிரச்சனையே இதுதான்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி












Click it and Unblock the Notifications