Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: 80% உறுதி.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி? சத்தியமூர்த்தி பவனில் களைகட்டிய பார்ட்டி! ஆனாலும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, தற்போதைய கூட்டணி அமைப்பில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்துடன் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுவது அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இதனையடுத்து உற்சாகத்தில் உள்ளதாம் காங்கிரஸில் உள்ள ஒரு கோஷ்டி.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்று வெளிப்படையாக தெரிவித்ததையடுத்து, காங்கிரஸ் தலைமையில் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் புதிய கூட்டணி வாய்ப்புகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ஆட்சியில் பங்கு வழங்கும் அரசியல் சமன்பாடு குறித்து காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மாற்று அரசியல் அமைப்பை ஆராயும் முயற்சிகள் வலுப்பெற்றுள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Congress tvk

திமுக கூட்டணி

அந்த சந்திப்பில், தமிழகத்தில் காங்கிரஸ் தனித்தோ அல்லது புதிய கூட்டணியுடன் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்த விரிவான சர்வே அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் அமைப்பின் ஆய்வு குழு தயாரித்த தகவல்களின் படி, கட்சிக்கு சாதகமானதாக கருதப்படும் தொகுதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்க்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணி

இதன் ஒரு பகுதியாக அவர் விரைவில் சென்னை வரவுள்ளதாகவும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு நடைபெறுமானால் கூட்டணி தொடர்பான முக்கிய முன்னேற்றமாக அது பார்க்கப்படும். இந்த தகவல்கள் வெளிவந்ததையடுத்து, மாநில அளவிலான சில காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி ஆலோசனை

குறிப்பாக சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற உள்கட்சி சந்திப்பில், கூட்டணி வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்திற்கு மாறாக, கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி கொண்டாட்ட சூழலில் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2026 தேர்தல்

எனினும் தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாகும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். தமிழக அரசியலில் கூட்டணிகள் தீர்மானிக்கும் முக்கிய காலகட்டத்தில், காங்கிரஸ் எடுக்கும் அடுத்த கட்ட முடிவு மாநில அரசியல் நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெளிவாகிறது. அதே நேரத்தில் காங்கிரசின் ஒரு தரப்பு விஜயுடன் கூட்டணி செல்ல தயாராக இருக்கும் நிலையில் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் தலைவர்களும் எம்எல்ஏக்களும் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தும் ராகுலை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால் அவர்கள் அமைதி காப்பதாக சொல்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+