Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆனால் ஆளும் திமுக மட்டும் இன்னும் தொகுதி பட்டியல் மற்றும் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாதது அந்த கூட்டணி வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ், தேமுதிக தான் அதற்கு காரணம் என அறிவாலய வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு போன்ற முக்கிய பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வந்தன.

அந்த வகையில், சமீபத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டார்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 dmk mk stalin

திமுக கூட்டணி

பின்னர் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு விட்டார். இந்த சூழலில், திமுக கூட்டணியில் மட்டும் தொகுதி பங்கீடு இறுதி செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இந்த தேர்தலில் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிட் மற்றும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள், மதிமுகவுகு 4 தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு 2 தொகுதிகள் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகள்

கடந்த தேர்தல்களை விட இந்த முறை அதிகமான கூட்டணி கட்சிகளை இணைத்திருப்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கு புதிய சிக்கலாம மாறியுள்ளது. கடந்த முறை 15 முதல் 16 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்த நிலையில், இந்த முறை 26 கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது தொகுதி பங்கீட்டை சிக்கலாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைவரும் மற்றும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலினுக்கு மீது அதிக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பிரேமலதா பிடிவாதம்

கூட்டணி கட்சிகளில் சில முக்கிய கட்சிகள் குறிப்பிட்ட தொகுதிகளை விடாமல் பிடிவாதமாக கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சில தொகுதிகளை மீண்டும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டிருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், தேமுதிகவும் சில முக்கிய தொகுதிகளை மார்க் செய்து கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் அதிருப்தி

குறிப்பாக ரிஷிவந்தியம் போன்ற தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தொகுதி பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களுக்கு குறைவான தொகுதிகள் வழங்கப்பட்டதாக அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களை விட பிற கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டதாக கருதி, சில முக்கிய தொகுதிகளை கோரியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் எப்போது?

இந்த நிலையே தொகுதி பட்டியலை இறுதி செய்வதில் தடையாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சூழலில், கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்துவது குறித்து திமுக தரப்பில் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தொகுதி பட்டியல் மற்றும் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தாமதமானது. தற்போது இன்றைக்குள் தொகுதி பங்கீடும் வேட்பாளர் பட்டியலும் இறுதி செய்யப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+