Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: நீங்க வேணா சண்டைக்கு வாங்க.. வேணும்னே ஒரண்டை இழுக்கும் காங்கிரஸ்! ஏக கடுப்பில் அறிவாலயம்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்ட நிலையில் 25 முதல் 27 தொகுதிகளை ஒதுக்கவும் உள்ளாட்சித் தேர்தல்களில் கூடுதல் பங்கு வழங்கப்படும் என திமுக உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட தொகுதிகள் தான் வேண்டும் என காங்கிரஸ் அடம் பிடிப்பதால் திமுக கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கூட்டணியில் புதிய கட்சிகளாக தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது.

இதனால் கடந்த 2021 தேர்தலை விட குறைந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என திமுக தலைமை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், கூட்டணியில் முக்கிய பங்காற்றும் காங்கிரஸ் கட்சியுடன் நடைபெறும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK

திமுக காங்கிரஸ் விரிசல்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை அதற்கு மேலான தொகுதிகளை கோரியதால் பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் இருந்து சிக்கல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் இடங்கள் குறைவாக உள்ளன என்பது திமுக தரப்பின் நிலைப்பாடாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைகளில், 40 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என காங்கிரஸ் தரப்பு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

மு.க. ஸ்டாலின்

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தெளிவாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் தற்காலிக தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸுக்கு 25 முதல் 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் கூடுதல் பங்கு வழங்கப்படும் என்றும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தொகுதிகள்

இந்த முன்மொழிவை காங்கிரஸ் ஏற்கும் நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்தின் முக்கிய மாவட்டமான மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சில முக்கிய தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தொகுதி ஒதுக்கீட்டில் பிராந்திய முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிப் பங்கீடு தொடர்பான சமநிலை ஏற்படுத்துவது முக்கிய சவாலாக உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் இடங்கள் பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தைகள் கட்டுக்கோப்பாக முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்பினரும் விரைவில் நேரில் சந்தித்து இறுதி முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தலைமை

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுகள் மற்றும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் விரைவில் வெளிவரும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டணியில் மேலும் விரிசலை அதிகரிக்கும் வகையில் தான் காங்கிரஸ் நடந்து கொள்வதாக புகார் எழுந்திருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகள் வேண்டும், தலைநகர் தொகுதிகள் வேண்டும் என அடுத்தடுத்து கோரிக்கைகளை காங்கிரஸ் வைத்துக்கொண்டே செல்வதால் திமுக தலைமை கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொகுதி ஒதுக்கீடு சர்ச்சை

குறிப்பாக மதுரை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. அங்கெல்லாம் ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் வேலையை தொடங்கி விட்டனர். அது மட்டும் அல்லாமல் சில முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளையும் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது பெற்ற வாக்குகளின் அடிப்படையில் காங்கிரஸ் கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில் கூட்டணியை விட்டு காங்கிரசை கழட்டி விடலாமா என்ற திட்டமும் இருப்பதாக சொல்கின்றனர். இதற்கு இடையே தமிழக வெற்றிக்கழகத்தை மனதில் வைத்து வேண்டுமென்றே கோரிக்கைகளுக்கு மேல் கோரிக்கைகளை காங்கிரஸ் வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+