Election Exclusive: ஸ்டாலினை கண்சிவக்க வைத்த காங்., அறிவாலயம் எடுக்க போகும் அதிரடி ஆக்ஷன்! எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
சென்னை: திமுக காங்கிரஸ் இடையிலான உறவு சுமூகமாக இருக்கிறது என பொதுவெளியில் பேசப்பட்டாலும் உண்மையில் திமுக தரப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தாவே காயங்களை கூட்டணிக்கு அழைத்தது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியது திமுக தலைவர் ஸ்டாலினை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணி எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சிகளுக்கே அதிர்ச்சி தரும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒன்றுதான் தேமுதிக கூட்டணிக்குள் கொண்டு வந்தது. திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த் இருக்கும் வரை, அதாவது அரசியலை அவர் கால் பதித்து 20 ஆண்டுகளில் திமுகவுடன் ஒருமுறை கூட கூட்டணி அமைக்கவில்லை.

திமுக தேர்தல் வியூகம்
அவரது மரணத்திற்கு பிறகு அவரது மனைவியும் தேமுதிகவின் பொது செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். உண்மையில் கூட்டணி கட்சிகளை ஒருவித அச்சத்தில் வைத்திருப்பதற்காக திமுக கையில் எடுத்த வியூகம் தான் இந்த நகர்வு என்கின்றனர்.
திமுக காங்கிரஸ் மோதல்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணி நிலையாக இருந்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சில சிறிய கட்சிகள் அந்த கூட்டணியில் தொடர்கிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் குரல் கொடுக்க, அது திமுக தலைமையை ரசிக்க வைக்கவில்லை. எங்களுக்கும் நிறைய கூட்டணி வாய்ப்புகள் உண்டு.. இருந்தால் இருங்கள் இல்லையேல் வெளியே செல்லுங்கள் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறது திமுக தலைமை.
தேமுதிக கூட்டணி
அதற்காகத்தான் தேமுதிக கூட்டணிக்குள் கொண்டு வந்ததாக சொல்கின்றனர். மேலும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த கமலஹாசன், கூட்டணியில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் பரம எதிரியான அதிமுகவில் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் கூட திமுக கூட்டணிக்கு வரலாம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் பார்வையாளர்கள் இதற்கிடையே நாளுக்கு நாள் திமுக காங்கிரஸ் இடையேயான விரிசல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
காங்கிரஸ் மேலிடம்
கூடுதல் தொகுதிகளை கேட்ட காங்கிரசுக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக பதிலளித்தது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தமிழகம் வந்து திமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் முடிவு ஏற்றப்படவில்லை. இதனால் காங்கிரசும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த நிலையில் தவெக எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்கிறார்கள். நாங்கள் ஒன்றும் தொண்டு நிறுவனம் நடத்தவில்லை என பேசியது திமுக தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் கூட்டணி மாற்றம்
கூட்டணிக்கு வந்தால் 25 தொகுதிகளை 10 எம்எல்ஏக்களாவது கிடைப்பார்கள், ஆனால் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு சென்றால் ஒன்றுமே கிடைக்காது என பேசி பார்த்தும் காங்கிரஸ் அடம் பிடிப்பதால் அந்த கட்சியை கழட்டி விடும் முடிவுக்கு திமுக தலைமை வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு நாட்களில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
மாறுபட்ட விஜய் வயது.. 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்கிறாரா தவெக தலைவர் -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கனிமொழி சொன்ன அந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர் யார்? அமித்ஷா போஸ்டிங் தருவாராமே! மதுரையில் பரபரப்பு -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே!












Click it and Unblock the Notifications