Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பில் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியாக நீடித்து வருகிறது. இந்நிலையில், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை போர்க் கொடி தூக்கி இருப்பது கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் எவ்வித சிக்கலும் இன்றி கூட்டணி முடிவுக்கு வரும் என்கின்றனர் திமுகவினர்.
திமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், முந்தைய தேர்தலை விட குறைந்த தொகுதிகளை ஏற்க வேண்டும் என்று திமுக தரப்பு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் தொகுதிகளை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைமையினர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

திமுக மார்க்சிஸ்ட் கூட்டணி
இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்றன. நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளை ஏற்க சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதே 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளுமாறு திமுக தரப்பு வலியுறுத்தியது. ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளை விட குறையாமல், அதற்கு மேலாக கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வருகிறது.
சிபிஎம் 7 தொகுதி
பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில், திமுக தரப்பு 6 தொகுதிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதற்கும் மார்க்சிஸ்ட் கட்சி சம்மதிக்காமல் 7 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலை தொடர்கிறது. இந்த சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு இந்த விவகாரத்தை கட்சியின் தேசிய தலைமையிடம் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதி பங்கீடு
திமுக தரப்பின் உறுதியான நிலைப்பாட்டால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து தேசிய தலைமைக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு முன்பாகவே தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே நிலவுகிறது.
திமுக கூட்டணி
அதேநேரத்தில், இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், மாநிலக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொத்தத்தில், திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவு பெற்றிருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடரும் இழுபறி முடிந்தால் தான் கூட்டணியின் இறுதி வடிவம் வரும் என்கின்றனர்.
கூட்டணி முடிவுக்கு வருமா?
திமுக கூட்டணி தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில் இடையில் தேர்தல்கள் வந்த போதும் எந்தவித சிக்கல்கள் ஏற்படவில்லை, இந்த நிலையில் 2026 தேர்தலில் கூடுதலாக சில கட்சிகள் வந்துள்ளதால் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கான தொகுதிகளை குறைப்பதை தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை. சில கட்சிகள் அதனை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் வாக்கு வங்கி, சட்டமன்ற உறுப்பினர்- எம்பிக்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை போர்க் கொடி தூக்கி இருப்பது கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் எவ்வித சிக்கலும் இன்றி கூட்டணி முடிவுக்கு வரும் என்கின்றனர் திமுகவினர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications