விருட்டென முன்னேறும் திமுக.. ஃபைனல் ஆன தொகுதி பங்கீடு பட்டியல்! யாருக்கு எவ்வளவு சீட்? கசிந்த தகவல்!
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில், பிற கட்சிகளுக்கான பட்டியலை கிட்டத்தட்ட திமுக இறுதி செய்துள்ளது. விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளுக்கு 8 முதல் 1 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திமுகவின் உத்தேச தொகுதி பங்கீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. பல மாதங்களாக தமிழகத்தின் பக்கம் எட்டிப் பார்க்காத டெல்லி தலைகள் அடிக்கடி வரத் தொடங்கியிருக்கின்றனர். பாஜக காங்கிரஸ் என தேசிய கட்சிகளின் தலைவர்கள் தற்போது பாதி நாட்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள்.
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக முழுக்க முழுக்க கூட்டணி விவகாரங்களை தனியே கையாண்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்கள் வேலைகளை தொடங்கிவிட்டனர்.

திமுக கூட்டணி
கே என் நேரு உள்ளிட்டோர் கூட்டணி பேச்சு வார்த்தைகளையும், கனிமொழி உள்ளிட்டோர் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் தேசிய கட்சியான காங்கிரஸ் திமுக முதுகின் மீது ஏறிதான் பல ஆண்டுகளாக சவாரி செய்து வருகிறது. தற்போதைக்கு விஜயை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு ராஜ்யசபா சீட்டு என கேட்டு நெருக்கடி கொடுத்தாலும் திமுக காங்கிரசில் லெப்ட் ஆண்டில் தான் டீல் செய்தது.
ராஜ்யசபா சீட்
கூடுதல் தொகுதிகளை தர முடியாது, ராஜ்யசபா சீட்டு தந்தாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தர முடியாது தமிழகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் டெல்லிக்கு அனுப்புவோம் என திட்டவட்டமாக கூறி, அதனை செய்தும் முடித்து விட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில், பிற கட்சிகளுக்கான பட்டியலை கிட்டத்தட்ட திமுக இறுதி செய்துள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள்
திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம்,கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், ஆகியவை உள்ளன.
காங்கிரஸ் 28 தொகுதி
தற்போதுள்ள சூழலில், காங்கிரஸ் - 28+1, தேமுதிக - 8+1, விசிக - 8, இந்திய கம்யூனிஸ்ட் -6, மார்க்சிஸ்ட்-6, மதிமுக - 6, தவாக - 2 , மக்கள் நீதி மய்யம் - 2, கொங்கு இளைஞர் பேரவை - 1, IUML - 2, மமக - 2, மஜக - 1, SDPI - 1, முக்குலத்தோர் புலிபடை - 1, தமிழர் தேசம் கட்சி - 1, கொங்கு நாடு தேசிய கட்சி - 2, அனைத்து இந்திய பார்வர்ட் பிளாக் - 1, முக்குலத்தோர் முன்னேற்ற கழகம் - 1, ஆதி தமிழர் பேரவை - 1, மக்கள் விடுதலை கட்சி - 1
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் - 1 என மொத்தம்82 சீட்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
தொகுதி பங்கீடு
மீதமுள்ள 152 தொகுதிகளில் திமுக தனது வேட்பாளர்கள் நேரடியாக நிறுத்துகிறது. அதே நேரத்தில் மதிமுக, மக்கள் நீதி மய்யம், கொங்கு இளைஞர் பேரவை, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மமக, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, பார்வேர்ட் பிளாக், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி என கிட்டத்தட்ட 25 முதல் 30 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் நின்றாலும், அவை திமுக சின்னமான உதயசூரியனில் நிற்க வைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
திமுக தனிப்பெரும்பான்மை
இதன் மூலம் 180க்கும் அதிகமான தொகுதிகளை திமுகவே நிற்பதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் இந்த ஆண்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. மேற்கண்ட பட்டியல் உத்தேச பட்டியில் தான் இதில் சில மாற்றங்கள் கடைசி நேரத்தில் செய்யப்படலாம் எனவும் சொல்கின்றனர்.
-
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே!












Click it and Unblock the Notifications