Election Exclusive: ஓடி வருகிறான் உதயசூரியன்.. சின்ன கட்சிகளுக்கு திமுக வைத்த செக்! ஓகேனா நில்லுங்க..இல்லைனா கிளம்புங்க!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது திமுக. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சில கட்சிகள் கூடுதல் தொகுதியை கேட்பதால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதை அடுத்து கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோரை திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க அறிவாலயம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் 180 தொகுதிகள் வரை திமுக நேரடியாக களம் இறங்கும் வாய்ப்புள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணிக் கணக்குகளை கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டன என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒருகாலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக தற்போது எந்த அணியில் சேர வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. பிரேமலதா விஜயகாந்தின் முடிவு திமுக கூட்டணியின் முடிவுகளை மாற்றக்கூடியதாக இருக்கும் என்பதால், அதற்கான அரசியல் பேச்சுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட நான்கு முக்கிய அணிகளுக்கிடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உள்ளது. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகள் வேகமெடுத்து வருகின்றன. திமுக ஏற்கனவே கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த முறையும் பெரிய கூட்டணிப் பலத்துடன் தேர்தலை சந்திக்கத் திமுக முயற்சி செய்து வருகிறது.
கூட்டணி கட்சிகள்
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், தவாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு வெளியிலும் சில சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திமுக சீட் பங்கீடு
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கியது. அந்த தேர்தலில் 133 இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதே மாதிரியான வெற்றிக் கணக்கை 2026-இலும் தொடர விரும்புகிறது. ஆனால் இம்முறை கூட்டணியில் இடம் பெற விரும்பும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை 174-இல் இருந்து 170 ஆக குறைக்க திட்டமிட்டது.
உதயசூரியன் சின்னம்
அதன்படி காங்கிரஸுக்கு 25, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 6, மக்கள் நீதி மய்யம் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 1 ஆகியவை போன்ற ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சிறிய கட்சிகளை திமுக சின்னத்தில் போட்டியிட வைத்தால் திமுக 180 தொகுதிகள் வரை களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களை திமுக சின்னத்திலேயே நிற்க வைக்கலாம் என திமுக திட்டமிட்டுள்ளது என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications